பிரதமரின் டிவிட்டர் கணக்கை நிர்வகிக்கும் சென்னையை சேர்ந்த சாதனை பெண்!

பிரதமர் மோடியின் டிவிட்டர் கணக்கை இன்று நிர்வகிக்கும் 7 சாதனை பெண்களில் சென்னையை சேர்ந்த சினேகா மோகன் தாஸும் ஒருவர்.

இன்று உலக மகளிர் தினத்தை முன்னிட்டு தனது டிவிட்டர் பக்கத்தை நிர்வகிக்கும் பொறுப்பை பெண் சாதனையாளர்களிடம் ஒப்படைத்துள்ளார் பிரதமர் மோடி.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில், “மகளிர் தினத்தை முன்னிட்டு இன்று எனது சமூக வலைதளங்களை பெண்கள் நிர்வகிப்பர் என்றும் 7 பெண் சாதனையாளர்கள் தங்கள் வாழ்க்கை பயணத்தை டிவிட்டர் பக்கத்தில் நாட்டு மக்களுடன் பகிர்ந்து கொள்வார்கள்” என்றும் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியின் டிவிட்டர் கணக்கை கையாளும் 7 சாதனைப்பெண்களில் சென்னையை சேர்ந்த சினேகா மோகன் தாஸ் என்ற பெண்ணும் ஒருவர். சமூக செயற்பாட்டாளரான இவர் ’புட் பேங்க்’ என்ற அமைப்பை நடத்தி உணவில்லாதவர்களுக்கு உணவு அளித்து வருகிறார்.

What do you think?

‘ மார்ச் 15’ நாள் குறித்த விஜய், எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

‘இறுதி போட்டியில் வெளுத்து வாங்கிய ஆஸ்திரேலியா’ இந்தியாவுக்கு 185 ரன்கள் இலக்கு!