சென்னை ஷாஹின்பாக்; தொடரும் 5-வது நாள் போராட்டம்

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக சென்னை வண்ணாரப்பேட்டையில் 5-வது நாளாக தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி, சென்னை வண்ணாரப்பேட்டையில் 5-வது நாளாக தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. கடந்த14-ஆம் தேதி போராட்டக்காரர்களை கலைந்து செல்லக் கூறிய காவல்துறையினர் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தினர். இதனால் இப்போராட்டம் தமிழகம் முழுவதும் தீவிரம் அடைந்தது.

சென்னையின் ஷாஹின்பாக் என்ற அழைக்கப்படுள்ள இப்போராட்டத்தில், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். மேலும், அமைதி வழியில் போராடியவர்கள் மீது தடியடி நடத்திய காவல்துறைக்கும் அவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்..

What do you think?

கட்டுக்குள் வராத கொரோனா; பலி எண்ணிக்கை 1,868 ஆக அதிகரிப்பு

டி.என்.பி.எஸ்.சி முறைகேடு; மீண்டும் சிபிசிஐடி விசாரணை