4-வது நாளாக தொடரும் சிஏஏ எதிர்ப்பு போராட்டம்

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக சென்னை, மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இஸ்லாமியர்கள் 4-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக சென்னை வண்ணாரப்பேட்டையில் போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள் மீது காவல்துறையினர் கடந்த வெள்ளிக்கிழமை அன்று தடியடி நடத்தினர். காவல்துறையின் இந்த நடவடிக்கைக்கு அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

இந்நிலையில், சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும், தமிழக சட்டப்பேரவையில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றக் கோரியும் இஸ்லாமியர்கள் 4-வது நாளாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அகிம்சை வழியில் போராடியவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதற்கு கடும் கண்டனம் தெரிவித்து முழக்கங்களை எழுப்பினர்.

மதுரையில் இஸ்லாமியர்களும், கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பபெற வேண்டும் எனக் கூறி, மத்திய அரசுக்கு எதிராக அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

What do you think?

டிக்-டாக்கில் மனைவியின் வீடியோ; கொலை செய்த கணவன்!

வதந்தியை பரப்பி போராட்டத்தை தூண்டியுள்ளனர் – முதலமைச்சர் விளக்கம்