February 27, 2020
Madhimugam
Exclusive Today Trending அரசியல் தமிழ்நாடு

சிஏஏ போராட்டத்தில் முதியவர் இறந்தார் என்பது வதந்தி – சென்னை மாநகர போலீஸ் விளக்கம்

சென்னை வண்ணாரப்பேட்டையில் சிஏஏவுக்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகள் நடத்திய போராட்டத்தில் முதியவர் இறந்தார் என்பது வதந்தி என சென்னை காவல்துறை விளக்கமளித்துள்ளது.

வண்ணாரப்பேட்டை பகுதியில் இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதனை திரும்பப் பெற வலியுறுத்தியும், சிஏஏவுக்கு எதிராக தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும் நேற்று மாலை போராட்டம் நடத்தினர். வண்ணாரப்பேட்டை கண்ணன் ரவுண்டானா அருகே நடந்த இப்போராட்டத்தில் பெண்கள் உட்பட 500-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்துகொண்டு குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

அப்போது அங்கு வந்த வடக்கு மண்டல இணை ஆணையர் கபில்சிபில் குமார் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இருப்பினும் யாரும் கலைந்து செல்லாமல் மீண்டும் சாலையோரமாக அமர்ந்து போராட்டம் நடத்தியுள்ளனர். இதனால் போலீசாருக்கும் போராட்டகாரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட ஆண்கள் மட்டுமின்றி பெண்கள் மீதும் தடியடி நடத்தியுள்ளனர். இதனால், அப்பகுதி முழுவதும் போர்க்களம் போல் காட்சியளித்தது.

போலீஸாரின் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து, தமிழகம் முழுவதும் இரவு என்றும் பாராமல் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர சென்னை காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் இஸ்லாமிய அமைப்பினரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், போராட்டத்தில் கைது செய்யப்பட்ட 100க்கும் மேற்பட்டவர்களை விடுதலை செய்வதாக காவல்துறை ஆணையர் உறுதியளித்தார். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

இதற்கிடையே, போராட்டத்தில் ஈடுபட்ட முதியவர் ஒருவர் காவலர்கள் தாக்கியதில் உயிரிழந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவியது. இதற்கு சென்னை மாநகர போலீஸ் மறுப்பு தெரிவித்துள்ளது. சென்னை மாநகர காவல்துறையின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “70 வயது மதிக்கத்தக்க முதியவர் இயற்கையாக மரணம் அடைந்ததை, வண்ணாரப்பேட்டை சிஏஏ போராட்டத்தில் இறந்துவிட்டதாக சிலர் தவறுதலாக வேண்டுமென்றே பொய்யான செய்தியை பரப்பி வருவதாகவும், அப்போராட்டத்தில் யாரும் இறக்கவில்லை எனவும், எச்சரிக்கை தேவை, இறந்துவிட்டர் என்ற பொய்த் தகவலை யாரும் நம்பவேண்டாம்” என்றும் தெரிவித்துள்ளது.

Related posts

“நீதிமன்றத்தில் எனக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி” – வைகோ பெருமிதம்!

Digital Team

பெண் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக ’விழித்திரு திட்டம்’

Digital Team

குரூப் 4 தேர்வு முறைகேட்டில் இன்னும் 700 பேருக்கு தொடர்பா?

Digital Team

மத சுதந்திரம் பற்றி டிரம்ப் மோடியிடம் பேசுவார் – வெள்ளை மாளிகை

Digital Team

டி.என்.பி.எஸ்.சி முறைகேடு தொடர்புடைய 4 பேரிடம் தீவிர விசாரணை – சிபிசிஐடி

Digital Team

தமிழகம் முழுவதும் இஸ்லாமியர்கள் CAA எதிர்ப்பு போராட்டம்

Digital Team
You cannot copy content of this page
Madhimugam