சென்னையில் விரைவில் இரண்டாவது விமான நிலையம்..!

சென்னையில் இரண்டாவது விமான நிலையம் அமைக்க விரிவான திட்டப்பணிகள் ஒப்பந்தம் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது

சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்துக்கு நாளொன்றுக்கு சுமார் 65 ஆயிரம் பயணிகள் வந்து செல்வதால் நெரிசல் ஏற்படுகிறது. எனவே இதை தவிர்ப்பதற்காக சென்னைக்கு அருகே 2-வது விமான நிலையம் அமைக்க விமான போக்குவரத்து ஆணையம் முடிவு செய்துள்ளது. இதற்காக மாமண்டூர் – செய்யூர் இடையே உள்ள பகுதியும், காஞ்சிபுரத்துக்கும், அரக்கோணத்துக்கும் இடையிலுள்ள பரந்தூர் ஆகிய இரு இடங்களில் ஒன்றைத் தேர்வு செய்ய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்நிலையில், 2-வது விமான நிலையத்தை பரந்தூரில் அமைக்க முடிவு செய்யப்பட்டது. மொத்தம் 4 ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பளவில் விமான நிலையம் அமைய உள்ளது. இது குறித்து உருவாக்கப்படும் விரிவான திட்ட அறிக்கையில் தேர்வு செய்யப்படும் நிறுவனம், விமான நிலையம் அமைய இருக்கும் இடத்தில் தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார ரீதியான சாத்தியக் கூறுகள் குறித்து, ஆய்வு நடத்தி அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கும். அதையடுத்து, விமான நிலையம் அமைக்கும் பணிகள் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

What do you think?

“அனைத்து மத வழிபாடு சுதந்திரம் தொடர்பாக விசாரிக்கப்படும்” – உச்சநீதிமன்றம் அதிரடி

டெல்லி ஜாமியா பல்கலை மாணவர்களின் பேரணியில் தள்ளுமுள்ளு