தமிழ்நாடு சட்டசபையில் 2023-24 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை (பட்ஜெட் 2023) தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். 3வது முறையாக தாக்கல் செய்யப்பட்டுள்ள காகிதமில்லா பட்ஜெட்டில் சென்னை, கோவை, மதுரை ஆகிய நகரங்களுக்கான முக்கிய அறிவிப்புகள் குறித்து பார்க்கலாம்…
சென்னைக்கான அறிவிப்புகள்:
அடையாறு , கூவம் பகுதிகளை மறுசீரமைக்க ரூ. 1,500 கோடி செலவில் செயல்படுத்தப்படும்
அடையாறு ஆற்றில் 44 கி.மீ தூரத்திற்கு தூய்மைப்படுத்தும் திட்டம், கரைகளில் பூங்கா மற்றும் பொழுதுபோக்கு மையங்கள் தனியார் பங்களிப்புடன் அமைக்கப்படும்
வட சென்னை வளர்ச்சித்திட்டம் ரூ.1000 கோடி செலவில் அடுத்த 3 ஆண்டுகளில் செயல்படுத்தப்படும்
சென்னை தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை அண்ணா சாலையில் 4 வழி சாலையாக மேம்பாலம் கட்டப்படும்
என்றும், சர்வதேச நிபுணர்களின் கருத்துக்கள் பெறப்பட்டு, நவீன அம்சங்களுடன் இந்த மேம்பாலம் கட்டப்படும் என்றும் அறிவிப்பு
சென்னை கண்ணகி நகர், நாவலூர், பெரும்பாக்கம், அத்திப்பட்டு பகுதியில் ரூ.20 கோடி செலவில் விளையாட்டு மையங்கள் அமைக்கப்படும்
வரும் காலங்களில் வெள்ளம், கனமழையை எதிர்கொள்வதற்கும், கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கும் ரூ.320 கோடி மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்படும்
சென்னை தீவுத்திடலில் 30 ஏக்கர் நிலப்பரப்பில் நகர்ப்புற பொதுச்சதுக்கம், கண்காட்சி அரங்குகள், திறந்தவெளி திரையரங்கம் ஆகிய நவீன வசதிகள் அமைத்திட ரூ.50 கோடி ஒதுக்கீடு.
சென்னையில் வெள்ள பாதிப்புகளை சமாளிக்கும் விதமாக ரூ.320 கோடி செலவில் வெள்ளத்தடுப்பு, நீர் வழித்தட மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படும்
வடபழனி, திருவான்மியூர், வியாசர்பாடியில் உள்ள பேருந்து பணிமனைகள் ரூ.1600 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.
சென்னை ஜவஹர்லால் நேரு திறந்தவெளி விளையாட்டு அரங்கத்தை மேம்படுத்த ₹25 கோடி ஒதுக்கீடு
சென்னை கிண்டியில் கட்டப்பட்டு வரும் 1000 படுக்கை வசதி கொண்ட கலைஞர் நினைவு பன்னோக்கு மருத்துவமனை நடப்பாண்டில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும்.
கோவை, மதுரைக்கான அறிவிப்புகள்:
கோவை, மதுரை நகரங்களை மேம்படுத்த எழில்மிகு கோவை, மாமதுரை என்ற வளர்ச்சித்திட்டங்கள் செயல்படுத்தப்படும் என தமிழ்நாடு பட்ஜெட்டில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.
கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் ₹9000 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் என்றும், இத்திட்டம் கோவை அவிநாசி சாலை – சக்தி சாலையை உள்ளடக்கியதாக அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரையில் ₹8500 கோடி செலவில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டம் மதுரை திருமங்கலத்தையும், ஒத்தக்கடையையும் இணைக்கும் படி அமைக்கப்பட உள்ளது.
மதுரையின் மையப்பகுதியில் நிலத்துக்கு அடியில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்பட உள்ளதாகவும் பட்ஜெட்ட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் ரயில்வே போக்குவரத்து பங்களிப்பு குறைவாக உள்ளதாகவும், இதை சரி செய்ய, ரயில்வே அமைச்சகம் உடன் இணைந்து புதிய வழித்தடங்களை உருவாக்க புதிய அரசு நிறுவனம் உருவாக்கப்படும் என்றும் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் என்றார்.
நேரலையில் பட்ஜெட் அறிவிப்புகளை அறிந்து கொள்ள…