‘சாம்பிள்ஸ் தருகிறேன்’ ஆண் நோயாளிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மருத்துவர் கைது!

சென்னையில் உள்ள ஒரு தனியார் தொலைக்காட்சியில் தீயணைப்பு பாதுகாப்பு உதவியாளராக பணிபுரிந்து வருகிறார் 40 வயதான நபர் ஒருவர். இவர் தற்போது சென்னை மந்தைவெளியில் தங்கியுள்ளார்.

இவருக்கு கடந்த 5ம் தேதி காய்ச்சல், இருமல் இருந்ததால் அவர் தன் நண்பருடன் அருகில் உள்ள கிளினிக்கிற்கு சென்று அங்கு டாக்டர் கார்த்திக் என்பவரிடம் பரிசோதித்துள்ளார்.

அந்த மருத்துவரும் அவருக்கு மருந்து, மாத்திரை, ஊசி போட்டுவிட்டு அந்த நபரின் செல்போன் நம்பரை வாங்கியுள்ளார் அந்த மருத்துவர். பின்பு 6-ம் தேதி மருத்துவமனைக்கு வந்து சாம்பிள்ஸை வாங்கிக்கொள்ளும்படி வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்பியுள்ளார்.

Whatsapp Chat

அதன்படி அந்த நபரும் மருத்துவர் கார்த்திகை சென்று சந்தித்துள்ளார். அப்போது அந்த கிளினிக்கில் மருத்துவரை தவிர வேறுயாருமில்லை. உடனே மருத்துவர் கார்த்திக், அந்த நபரிடம் உங்களுக்கு உடல் முழுவதும் பரிசோதனை செய்ய வேண்டும் அதனால் என்னுடன் வாருங்கள் என்று கூறி கிளினிக்கிலிருந்து அருகில் உள்ள ஒரு இடத்துக்கு அழைத்துச்சென்றுள்ளார். அங்கு சென்றதும் கதவு, ஜன்னல்களைப் பூட்டியுள்ளார்.

பின்னர் மருத்துவர் கார்த்திக், அந்த நபருக்கு மயக்க ஊசியை போட்டுள்ளார். இதனால் அந்த நபர் அரைமயக்கத்துக்கு செல்ல மருத்துவர் அந்த நபருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மயக்கம் தெளிந்த பின்பு அந்த நபர் மருத்துவரிடம் சண்டைபோட அவரை அங்கிருந்து வலுக்கட்டாயமாக வெளியில் அனுப்பியுள்ளார்.

இந்த சம்பவத்தால் மிகவும் மனமுடைந்த அந்த நபர் தன்னை போல வேறுயாரும் பாதிக்கப்படாது என்பதற்காக அந்த மருத்துவர் மீது காவல்நிலையத்தில் தைரியமாக புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் பேரில் மருத்துவரை கைது செய்த போலீசார் அவர்மீது இந்திய தண்டனைச் சட்டம் 406, 341, 377 ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

What do you think?

மோடிக்கு காங்கிரஸ் கட்சி எழுதிய எதிர்ப்பு கடிதம்?

‘அவளை கண்ணீருடன் பார்க்க ரொம்ப கஷ்டமாக இருந்தது’ பிரெட்லீ வேதனை!