தங்கம் விலை வீழ்ச்சி – மக்கள் மகிழ்ச்சி

சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு 584 ரூபாய் குறைந்துள்ளது.

சர்வதேச சந்தையில் நிலவும் ஏற்ற இறக்கங்களில் எதிரொலியாக இந்தியாவில் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. அதன்படி கடந்த சில நாட்களாக குறைந்து வந்த தங்கத்தின் விலை நேற்று சற்று உயர்ந்தது.

இந்நிலையில், இன்று ஆபரணத் தங்கம் சவரனுக்கு 584 ரூபாய் குறைந்து 30,960 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் 73 ரூபாய் குறைந்து 3,870 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ஆயிரத்து 800 ரூபாய் குறைந்து, 39 ஆயிரத்துக்கும், ஒரு கிராம் வெள்ளி 1 ரூபாய் 80 காசுகள் குறைந்து 39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

What do you think?

“சமஸ்கிருதம் ஏனைய மொழிகளை அழித்துவிடும்” – வைகோ எச்சரிக்கை

மீளமுடியாத சரிவில் பங்குச்சந்தை!