இஸ்லாமிய அமைப்புகளின் போராட்டத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை! – CAB

இஸ்லாமிய அமைப்புகளின் சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டம், என்.பி.ஆர், என்.ஆர்.சி ஆகிய சட்டங்களுக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றக்கோரி, பிப்ரவரி 19 ஆம் தேதி சட்டமன்ற முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என இஸ்லாமிய அமைப்புகள் அறிவித்தன. இந்த போராட்டத்துக்கு தடைகோரி வாராகி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு இன்று (பிப்-18) விசாரணைக்கு வந்தபோது, போராட்டத்துக்கு அனுமதி கேட்டு உரிய காலத்தில் மனு அளிக்கவில்லை என காவல்துறை தெரிவித்தது. இதனைக் கேட்டுக்கொண்ட நீதிபதிகள், இஸ்லாமிய அமைப்புகளின் சட்டமன்ற முற்றுகை போராட்டத்துக்கு மார்ச் 11 ஆம் தேதி வரை தடை விதித்து உத்தரவிட்டனர். அன்றைய நாளில் மத்திய, மாநில அரசுகள், தமிழக காவல்துறை ஆணையர் உள்ளிட்டோர் பதிலளிக்கவும் உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கையும் ஒத்திவைத்தனர்.

What do you think?

காவலர் தேர்வு முறைகேடு; சிபிசிஐடி விசாரணைக்கோரி வழக்கு

அமைதியை சீர்குலைக்க எதிர்க்கட்சிகள் சதி; முதலமைச்சர் ஆவேசம் – CAB