விதிமீறிய கட்டடங்கள் : அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு

விதிமீறி கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் எத்தனை என ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய. மாநில கடலோர ஒழுங்குமுறை மண்டல ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கிழக்கு கடற்கரை சாலையில் விதிமீறி கட்டப்பட்டுள்ள பங்களாக்களில் எதிராக நடவடிக்கை எடுப்பது தொடர்பான வழக்குகள், நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தன. அப்போது உத்தண்டி முதல் மாமல்லபுரம் வரை உள்ள பங்களாக்களில் எத்தனை, அனுமதி இல்லாமல் கட்டப்பட்டவை என்பதை வருவாய் துறை, காவல்துறை அதிகாரிகளின் உதவியுடன் ஆய்வு செய்து, ஏப்ரல் 2ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மாநில கடலோர மண்டல ஒழுங்குமுறை ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளனர்.

ஏற்கனவே, நீலாங்கரை முதல் உத்தண்டி இடையிலான பகுதிகளில் உள்ள நடிகர்கள், தொழிலதிபர்கள், முக்கிய பிரமுகர்களுக்கு சொந்தமான 700 விதிமீறல் கட்டிடங்களுக்கு ஓராண்டுக்கு முன்பே நோட்டீஸ் அனுப்பியிருந்தனர். இந்நிலையில், அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சி ஆணையருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

What do you think?

மகா சிவராத்திரி; ஆலயங்களில் குவியும் பக்தர்கள்

தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி மீது சைபர் கிரைம் போலீசார் வழக்கு