மார்ச் 31 வரை அவசர வழக்குகள் மட்டும் விசாரிக்கப்படும்- உயர்நீதிமன்றம்

கொரோனா ‌வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வரும் மார்ச் 31-ஆம் தேதி வரை அவசர வழக்குகள் மட்டும் விசாரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் வுஹான் நகரிலிருந்து பரவிய தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பரவியுள்ளது. தற்போது இந்தியாவிலும் இந்த கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனையொட்டி தமிழகத்திலும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

பள்ளி, கல்லூரி மற்றும் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. மேலும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கும், வேறு மாநிலங்களுக்கு பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் கொரோனா ‌வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வரும் மார்ச் 31-ஆம் தேதி வரை அவசர வழக்குகள் மட்டும் விசாரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது‌ குறித்து சென்னை உயர்நீதிமன்ற த‌லைமை பதிவாளர் சி.குமரப்பன் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் , ‌”நீதிமன்ற வளாகத்திலும், அறைகளிலும் மக்கள் அதிக அ‌ளவில் கூடுவதை தவிர்க்க வேண்டும். நீதிமன்றத்திற்கு வரும் அனைவரும் மருத்துவ பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுவர்.

தினமும் மாலை 5 மணிக்கு மேல் நீதிமன்றம் முழுவதும் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்ய வேண்டும், வழக்கறிஞர்கள் சங்கங்களின் அலுவலகம்,‌ உணவகம், நீதிமன்ற அருங்காட்சியகம், சமரச மையங்கள்,‌ தமிழ்நாடு சட்டப்பணி ஆணைக்குழு ஆகியவை செயல்படக் கூடாது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் “மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து கீழமை நீதிமன்றங்களும் இதே நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றும் மேலும் முக்கிய வழக்குகளை காணொலி காட்சி மூலமும் விசாரிக்கவேண்டும்” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

What do you think?

‘கொரோனா முன்னெச்சரிக்கை’ 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தி கொண்ட பாஜக எம்பி!

‘கொரோனா வைரஸ்’ முக. ஸ்டாலின் வெளியிட்ட விழிப்புணர்வு வீடியோ!