சென்னை அருகே பேருந்து – லாரி விபத்து; பெண் பலி

சென்னை மதுராந்தகம் அருகே கண்டெய்னர் லாரியும் சுற்றுலா சென்ற பேருந்தும் மோதிக்கொண்டதில் பெண் பரிதாபமாக உயிரிழந்தார், 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், 52 பேருடன் சுற்றுலாப் பேருந்து சென்று கொண்டிருந்தது. குன்றத்தூர் வழியாக சென்ற பேருந்து முன்னால் சென்றுக்கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது மோதியது.

இதில் காயமடைந்த 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து மதுராந்தகம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

What do you think?

குரூப் 1 தேர்வு முறைகேடு; குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய அரசு அனுமதி

வர்த்தகத்தையும் முடக்கிய கொரோனா!