AngryAngry CryCry LOLLOL LoveLove OMGOMG WTFWTF

சென்னையில் மெட்ரோ ரயில் சேவை ரத்து!

பிரதமரின் ஊரடங்கு உத்தரவு அழைப்பை ஏற்று சென்னை மெட்ரோ ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் நேற்று மக்களிடம் தொலைக்காட்சி வாயிலாக உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “மார்ச் 22ஆம் தேதி காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் மக்கள் தங்களுக்குத் தாங்களே கட்டுப்பாடு விதித்துக் கொண்டு வீடுகளுக்குள் இருக்கவேண்டும். இது மக்கள் ஊரடங்கு உத்தரவு என்றும் மிக மிக அத்தியாவசிய தேவைகள் இருந்தால் மட்டும் தான் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டும்” என்றும் கோரிக்கை வைத்தார்.

இந்த நிலையில் பிரதமரின் ஊரடங்கு உத்தரவு அழைப்பை ஏற்று வரும் மார்ச் 22 தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று ஒருநாள் மட்டும் சென்னை மெட்ரோ ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

What do you think?

‘சாத்தூர் பட்டாசு ஆலையில் திடீர் வெடிவிபத்து’ 6 பேர் உயிரிழப்பு!

‘திடீரென 2வது திருமணம் செய்துகொண்ட அமலாபால்’