சமூக விரோதிகள் கைவரிசை காட்ட வாய்ப்பு! – ஏ.கே.விஸ்வநாதன் எச்சரிக்கை

கிருமி நாசினி தெளிப்பவர்கள், கொரோனா விழிப்புணர்வு செய்பவர்கள் போல சமூக விரோதிகள் வீட்டுக்குள் நுழைந்து கைவரிசை காட்டக்கூடும் என்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் அறிவுறுத்தியுள்ளார்.

பொது இடங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணியும் அரசு சார்பில் முழு வீச்சில் நடந்து வருகிறது. இந்நிலையில், இதுபோன்ற சூழலை பயன்படுத்தி சமூக விரோதிகள் கைவரிசை காட்ட வாய்ப்பு இருப்பதாக சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் எச்சரித்துள்ளார்.

கிருமிநாசினி தெளிப்பவர்கள், கொரோனா குறித்து விழிப்புணர்வு செய்பவர்கள் போல சமூக விரோதிகள் வீடுகளுக்குள் புகுந்து கைவரிசை காட்ட வாய்ப்புள்ளது. எனவே, பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.

சந்தேக நபர்கள் நடமாட்டம் இருந்தால், அருகே உள்ள காவல் நிலையம் அல்லது காவல் கட்டுப்பாட்டு அறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

What do you think?

வெடி விபத்தில் இறந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் – வைகோ

புதுவையில் மார்ச் 31 வரை 144! – கொரோனா அப்டேட்