‘சென்னையில் மேலும் ஒருவருக்கு கொரோனா’ அமைச்சர் அதிர்ச்சி தகவல்!

சென்னையில் மேலும் ஒருவருக்கு  கொரோனா வைரஸ்’ பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளார் .

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலேயே மகாராஷ்டிராவில் தான் இந்த கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அங்கு 42 பேருக்கும் அதற்கு அடுத்தபடியாக கேரளாவில் 26 பேருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

தமிழகத்தில் ஏற்கனவே காஞ்சிபுரத்தை சேர்ந்த பொறியாளர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு குணமான நிலையில் தற்போது மேலும் ஒருவருக்கு சென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதிசெய்ப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் டிவிட்டரில் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளார்.

What do you think?

‘வீடியோ கான்பரன்ஸ் கல்யாணம்’ கொரோனாவால் நிகழ்ந்த வினோதம்!

கோயம்பேடு மார்க்கெட் மூடப்பட்டது! – 10 ரூபாய்க்கு காய்கறி விற்பனை