‘250CC இன்ஜின், 150KM High Speed’ சென்னை டிராபிக் போலீசின் புதிய Bike!

தமிழ்நாடு போக்குவரத்துக் காவல்துறைக்கு புதிய சுஸூகி ஜிக்ஸர் SF 250 பைக் வழங்கப்பட்டது.

2.10 லட்சம் ரூபாய் விலை கொண்ட இந்த ஜிக்ஸர் SF 250 பைக் 250சிசி இன்ஜின் கொண்டது.26bhp பவர் வெளிப்படுத்தக்கூடியது. அதிகபட்சம் 150 கி.மீ வேகம் வரை செல்லக்கூடியது. இந்த பைக்கில் போக்குவரத்துக் காவல் துறைக்காகச் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி சைரன், ஃபிளாஷ் லைட், ஒலிப்பெருக்கி, ஜிபிஎஸ் டிராக்கிங் கருவி, உயரமான விண்ட் ஷீல்டு, பைக்கின் இரண்டு பக்கமும் பெட்டி எனக் காவலர்களுக்குத் தேவையான அனைத்தும் அதில் இடம்பெற்றுள்ளது.

நேற்று சென்னையில் காவல்துறை ஆணையாளர் ஏ.கே. விஸ்வநாதன் தலைமையில், போக்குவரத்துத் துறைக்கு இந்த சுஸூகி ஜிக்ஸர் SF 250 வழங்கப்பட்டது. முதல் சுற்றாக, தற்போது 5 பைக்குகள் வழங்கப்பட்டுள்ளன. இதுவரை தமிழ்நாடு காவல் துறைக்கு கொடுக்கப்பட்டதிலேயே வேகமாகச் செல்லக்கூடிய பைக் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

What do you think?

‘விஜய்யின் அந்த ரகசியம் எனக்கு தெரியவேண்டும்’ ஹிருத்திக் ரோஷன்!

கொரோனாவால் 54,000 சிறை கைதிகளுக்கு விடுதலை!