சிசிடிவி கேமரா உதவியுடன் கொள்ளையர்கள் கைது!

சென்னையில் தொழிலதிபர் வீட்டில் 90 பவுன் கொள்ளையடித்த மர்ம நபர்கள் 3 பேரை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் காவல்துறையினர் கைது செய்தனர்.

சென்னை வளசரவாக்கம் ராதாநகரைச் சேர்ந்தவர் கட்டுமான பொறியாளர் ஆறுமுகம். இவர், தனது குடும்பத்துடன் கடந்த மாதம் 28 ஆம் தேதி வெளியே சென்றிருந்தார். அப்போது, அவரது வீட்டின் பூட்டை உடைத்து 90 பவுன் நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த வளசரவாக்கம் காவல்துறையினர், அந்த பகுதியில் பதிவான சிசிடிவி காட்சிகளை ஆய்வுசெய்து விசாரணை நடத்தினர்.

அதன் அடிப்படையில், கோவையில் பதுங்கியிருந்த முருகானந்தம், கோவூர் ஆனந்த், சங்கர பாண்டியன் ஆகியோரை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 63 சவரன் நகை, 4 லட்சம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும், தலைமறைவாக இருக்கும் திருவாரூர் ஜீவானந்தத்தையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

What do you think?

“சத்துணவுத் திட்டம், மனுதர்ம திட்டம் ஆகின்றது” – வைகோ கண்டனம்

வைகோவின் கோரிக்கைக்கு சட்ட அமைச்சர் விளக்கம்