AngryAngry CryCry LOLLOL LoveLove OMGOMG WTFWTF

‘திரையரங்குகள், வணிக வளாகங்களை மூடுங்கள்’ முதலமைச்சர் உத்தரவு!

கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.

உலகம் முழுவதும் மிகப்பெரிய அளவில் அச்சத்தை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் இதன் பாதிப்பு அதிகமாக இல்லாதபோதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. இந்நிலையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இந்த கொரோனா முன்னெச்சரிக்கையாக பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.

அதன்படி, “தமிழக எல்லையோர மாவட்டங்களில் உள்ள திரையரங்குகள், வணிக வளாகங்களை மார்ச் 31ஆம் தேதி வரை மூட உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழகம் முழுவதும் எல்.கே.ஜி முதல் 5ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளுக்கு மார்ச் 31ஆம் தேதி வரை விடுமுறை என்று அறிவித்துள்ளார். மேலும் வெளிமாநிலங்களில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் தமிழக மக்கள் வெளிமாநிலங்களுக்கு செல்ல வேண்டாம் என்றும் தேவையில்லாமல் மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்லவேண்டாம்” என்றும் முதலமைச்சர் பழனிச்சாமி அறிவுறுத்தியுள்ளார்.

What do you think?

‘கொரோனா வைரஸ்’ தொடக்கம் முதல் இன்று வரை!

‘போஸ் வெங்கட் இயக்கத்தில் கதாநாயகனாகும் உறியடி புகழ் விஜயகுமார்’