ஜி20 மாநாட்டின் விருந்தில் பங்கேற்க முதல்வர் மு.க ஸ்டாலின் டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார்.
டெல்லி பாரத் மண்டபத்தில் இந்தியா தலைமையில் ஜி20 உச்சி மாநாடு தொடங்கி நடைப்பெற்று வருகிறது. இன்றும் நாளையும் மாநாட்டில் அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ரஷியா, சீனா போன்ற வளர்ந்த மற்றும் வளரும் நாடுகள் பங்கேற்றுள்ளன.
இதனையடுத்து உலகத் தலைவா்கள், தொழிலதிபா்கள் உள்ளிட்டோருக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, உச்சிமாநாடு நடைபெறும் பாரத மண்டப வளாகத்தில் இன்று இரவு விருந்து அளிக்கவுள்ளாா். முன்னாள் பிரதமா்கள், மாநில முதல்வா்களுக்கும் இரவு விருந்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், இன்று காலை விமானம் மூலமாக டெல்லி புறப்பட்டுச் சென்றார். குடியரசுத் தலைவர் அளிக்கும் விருந்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, டெல்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால், பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான், பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அழைப்பு விடுக்காததால் காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்கள் இதில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.