பாஜக வெளிநடப்பு செய்ததன் மூலம் சரியான தீர்மானத்தை கொண்டு வந்திருக்கிறோம் என்பது தெரிகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பட்டியலின இட ஒதுக்கீடு உரிமைகளை சீக்கியம், பவுத்த மதங்களுக்கு மாறிய ஆதிதிராவிடர்களுக்கு வழங்கியது போல கிறிஸ்தவத்திற்கு மாறியவர்களுக்கும் வழங்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனி தீர்மானத்தை கண்டித்து பாஜக வெளிநடப்பு செய்தது.
அதனைத் தொடர்ந்து பேரவையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ; சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்டிருக்கும் இந்த தீர்மானம் ஏனோதானோ என கொண்டு வரப்படவில்லை, இந்த தீர்மானத்தின் மீது பல்வேறு கட்ட ஆலோசனைகளை மேற்கொண்டு, சட்ட வல்லுனர்களுடன் கலந்து பேசிய பிறகுதான் இதனை முன்மொழிந்திருக்கிறோம்!”
சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டிருக்கும் தனித்தீர்மானத்தை கண்டித்து வெளிநடப்பு செய்ததன் மூலம் சரியான தீர்மானத்தை தான் கொண்டு வந்திருக்கிறோம் என்பது தெரிகிறது என பேசினார்.