கரு சுமக்கும் பெண்களும் இனி கோயில் கருவறைக்குள் அர்ச்சகராக நுழையலாம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முதல்வர் முக ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு பதவியேற்ற பிறகு அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என திட்டத்தைக் கொண்டு வந்து அதற்கான பயிற்சியி வகுப்புகளையும் தொடங்கினார். இதில் ஏராளமானோர் சேர்ந்து படித்து வந்தனர். இந்நிலையில் ஆண்களுக்கு சமமாக ரம்யா, கிருஷ்ணவேணி, ரஞ்சிதா ஆகிய மூன்று பெண்களும் சேர்ந்து தற்போது அர்ச்சகர் பயிற்சி முடித்துள்ளனர். அர்ச்சகர் பயிற்சியை பெண்கள் முடிப்பது இதுவே முதல் முறை.
இன்று அமைச்சர் சேகர்பாபு அர்ச்சகர் பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை வழங்கினார். அதில் மூன்று பெண்கள் இடம்பெற்றிருந்தன. இதுத்தொடர்பாக முதல்வர் மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்,
‘பெண்கள் விமானத்தை இயக்கினாலும், விண்வெளிக்கே சென்று வந்தாலும் அவர்கள் நுழைய முடியாத இடங்களாக கோயில் கருவறைகள் இருந்தன. பெண் கடவுளர்களுக்கான கோயில்களிலும் இதுவே நிலையாக இருந்தது.
ஆனால், அந்நிலை இனி இல்லை! அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் எனப் பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை நமது திராவிடமாடல் ஆட்சி அகற்றியதில், கரு சுமக்கும் பெண்களும் இனிக் கருவறைக்குள்…’ என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் அர்ச்சகர் பயிற்சி முடித்த மூன்று பெண்களும் விரைவில் கோவில்களில் அர்ச்சகராக நியமிக்கப்படுவார்கள் என உறுதியாகி உள்ளது.
பெண்கள் விமானத்தை இயக்கினாலும், விண்வெளிக்கே சென்று வந்தாலும் அவர்கள் நுழைய முடியாத இடங்களாகக் கோயில் கருவறைகள் இருந்தன. பெண் கடவுளர்களுக்கான கோயில்களிலும் இதுவே நிலையாக இருந்தது.
ஆனால், அந்நிலை இனி இல்லை! அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் எனப் பெரியாரின் நெஞ்சில் தைத்த… https://t.co/U1JgDIoSxb
— M.K.Stalin (@mkstalin) September 14, 2023