பாஜகவை எச்சரித்த”முதல்வர் மு.க.ஸ்டாலின்”..!!
அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டிருக்கும் நிலையில், அவருக்கு ஆதரவாக பேசி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் திமுகவை யாரும் சீண்டி பார்க்க வேண்டாம். என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் அந்த வீடியோவில் பேசிய அவர் “அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அமலாக்க துறை மூலம் அவர்கள் கொடுக்கின்ற தொல்லைகள் எல்லாம் அரசியல் பழிவாங்கும் செயல், இதில் எந்த சந்தேகமும் இல்லை. எங்களுக்கும் அரசியல் தெரியும், இது மிரட்டல் அல்ல எச்சரிக்கை.
ஆட்சிக்காக கட்சி நடத்துபவர்கள் நாங்கள் அல்ல, கொள்ளைக்காக செயல்படும் கட்சி தான் எங்களுடையது. கொள்கையை காப்பாற்ற நாங்கள் கடைசிவரை போராடுவோம்.
அதிக மனம் அழுத்தம் கொடுத்து.., உடல் ரீதியாக உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் செந்தில் பாலாஜிக்கு இதயநோய் ஏற்படுத்த வைத்துள்ளனர். இது அரசியல் பழிவாங்கல் என்பது எங்களுக்கு தெரியும்.
திமுகவினரை சீண்டி பார்க்க வேண்டாம், எங்களுக்கும் எல்லாம் வித அரசியலும் தெரியும், இது மிரட்டல் அல்ல எச்சரிக்கை. 5முறை சட்டமன்ற உறுப்பினராகவும், 2 முறை அமைச்சராகவும் இருக்கும் செந்தில் பாலாஜியை .. ஏன் தீவிரவாதியிடம் விசாரணை செய்வதை போல, விசாரணை நடத்த வேண்டும்.
அறிவிக்கப்படாத எமர்ஜென்சியிலா நாடு இருக்கிறது..? உ.பி.மத்தியபிரதேசம் மற்றும் குஜராத்தில் ரெய்டுகள் நடத்தப்படாது.., ஏனென்றால் அங்கு பாஜக ஆட்சி நடக்கிறது. என பேசி முதலமைச்சர் ஸ்டாலின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது..