ஈரோடு வெடிவிபத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு நிவாரணம் தொகை வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு..!!
ஈரோடு கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள புஞ்சைத்துறையம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட டி.என்.பாளையம் வன எல்லையில் ஆதிபெருமாள் கோயில் கரடு என்ற இடத்தில், பெருந்துறை பகுதியைச் சேர்ந்த லோகநாதன் என்பவர் அவரது மனைவி பெயரில் சட்டவிரோத கல்குவாரி செயல்பட்டு வந்தது.
2015ஆம் ஆண்டே உரிமம் முடிவடைந்த நிலையில், கடந்த 9 ஆண்டுகளாக சட்டவிரோதமாக இயங்கி வருவதாகக் கூறப்படுகிறது. இந்தநிலையில் இந்த குவாரியில் 10 மேற்ப்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். இன்று வழக்கம் போல் வேலைக்கு வந்த தொழிலாளர்கள் சட்டவிரோதமாக வெடி வைத்து பாறையை உடைத்துள்ளனர். அப்போது ஏற்பட்ட விபத்தில் அங்கிருந்த செந்தில் குமார் மற்றும் அஜித்குமார் என்ற தொழிலாளர்கள் இருவர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இந்த வெடிவிபத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு தலா 3 லட்சம் ரூபாய் நிதியாக வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்., “ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் வட்டம், வாணிபுத்தூர் உள்வட்டம். புஞ்சைதுறையம்பாளையம் ‘அ’ கிராமத்தில் அனுமதியின்றி செயல்பட்டுவந்த தனியார் கல்குவாரியில் நேற்று (20.8.2024) மாலை சுமார் 5.30 மணியளவில் எதிர்பாராதவிதமாக நிகழ்ந்த வெடிவிபத்தில் கல் உடைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த கோபிசெட்டிபாளையம் வட்டம், அயலூர் கிராமத்தைச் சேர்ந்த செந்தில்குமார் (வயது 50) த/பெ. ராஜீ மற்றும் கர்நாடக மாநிலம், சாம்ராஜ்நகர் மாவட்டம்,
மாட்டவள்ளி பகுதியைச் சேர்ந்த அஜீத் (வயது 27) த/பெ. ஆறுமுகம் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற செய்தியைக் கேட்டு மிகவும் வருத்தமும் வேதனையும் அடைந்தேன். மேலும், இந்த குடும்பத்தினருக்கும் அவர்களது வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என்று கூறினார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..