முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிபட்டுள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மனைவியும், முதல்வர் மு.க.ஸ்டாலின் தாயாருமான தயாளு அம்மாள் உடல் நலக்குறை காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வயது மூப்பு காரணமாக இன்று(மார்ச்.10) திடீரென அவருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் குடும்பத்தார் கோபாலபுரம் வீட்டிலிருந்து தாயாளு அம்மாளை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
வழக்கமான மருத்துவ பரிசோதனை தான் என்றும், இன்று(மார்ச்.10) மாலை 6 மணி அல்லது இரவு 7 மணிக்குள் வீடு திரும்பி விடுவார் என்று மருத்துவமனையிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.