முதலமைச்சர் அல்லது துணை முதலமைச்சர் தலையிட்டு இதை செய்ய வேண்டும்..!! காளியம்மாள் கோரிக்கை..!!
நாம் தமிழர் கட்சியின் உறுப்பினராக இருந்த காளியம்மாள் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், “நாம் தமிழர் கட்சியில் முழு சுதந்திரம் இருக்கிறது. விரும்பி இயங்குவதற்கும், விருப்பம் இல்லையெனில் வெளியேறுவதற்கும் முழு சுதந்திரம் இருக்கிறது.
தங்கையை (காளியம்மாள்) நான்தான் அழைத்து வந்தேன். அவருக்கு எல்லா சுதந்திரமும் இருக்கிறது. பக்கத்தில் நிற்பவர் கூட நாளைக்கு வேறு ஓர் அமைப்புக்கு போகலாம். வரும்போது ‘வாங்க வாங்க, வணக்கம்’ என்போம். போகும்போது ‘போங்க, ரொம்ப நன்றி. வாழ்த்துகள்’ என்று சொல்வோம். இது எங்களுடைய கொள்கை என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், காளியம்மாள் திமுக விற்கு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான செய்திக்குறிப்பில், ஒருவர் கட்சியில் இருந்து வெளியாகி தடைகள் விலக வேண்டும் என்றும் அண்ணன் ராஜீவ்காந்தி அவர்கள் திமுக விற்கு வந்த போதே நாம் தமிழரில் நமது மீதமுள்ள பங்கு காளியம்மாள் முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இப்போது அதற்கான காலம் நெருங்கி வந்தாலும் திமுக விற்குள் சில தடைக்கற்கள் உருவாகி , காளியம்மாள் அவர்களை வேறு திசை நோக்கி நகரச் செய்வதாக செய்திகள் வருகின்றது. அப்படி நடப்பது திமுக விற்கு சரியான அரசியல் நகர்வாக இருக்காது . ஏனென்றால் வெளியே வந்த பின் காளியம்மாள் அவர்களின் பேச்சுகள், நாம் தமிழர் கட்சியையே ஆட்டங் காணச் செய்வதாக அமையும். அது அவ்வளவும் உண்மையாகவும் இருக்கும் என்பதால் மிகவும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் அமையும் .
தமிழ் தேசியம் என்ற பெயரில் திமுகவிற்கும் திராவிடத்திற்கும் எதிராக ஆரியம் பின்னும் வலைப்பின்னல் களை புட்டு பட்டு வைக்கும் அந்த பேச்சுகள் கண்டிப்பாக திமுக மேடைகளில் நிகழ்த்தப்பட வேண்டும்.
எனவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அல்லது துணை முதலமைச்சர் தலையிட்டு, காளியம்மாள் அவர்களை கனிமொழி மேடம் அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். காளியம்மாள் நிகழ்கால அரசியலில் ஒரு சிறந்த ஆளுமை . திமுக அவரை அணைத்துக் கொள்ள வேண்டும். தவற விட்டால் தவறாகி விடும் என இவ்வாறே அவர் பதிவிட்டுள்ளார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..