‘அன்பழகனின் மறைவு தமிழ்நாட்டிற்கு பேரிழப்பு’ முதலமைச்சர்!

திமுகவின் பொதுச்செயலாளருமான பேராசிரியர் க.அன்பழகனின் மறைவிற்கு முதலமைச்சர் பழனிச்சாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

மூத்த அரசியல்வாதியும், திமுகவின் பொதுச்செயலாளருமான பேராசிரியர் க.அன்பழகன் இன்று அதிகாலை 1 மணியளவில் காலமானார். தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் க. அன்பழகனின் உடல் கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டது. அவரது உடலுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். அவரது மறைவிற்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் மறைவிற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “க.அன்பழகன் மறைவு தமிழ்நாட்டிற்கு பேரிழப்பு,அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் திமுகவினருக்கு ஆழ்ந்த இரங்கல் மற்றும் அனுதாபங்கள் என்றும் மேலும் திராவிட இயக்க கொள்கைகளில் இருந்து விலகாத உறுதிமிக்க மூத்த அரசியல்வாதியாக விளங்கியவர்” அன்பழகன் என்றும் தெரிவித்துள்ளார்.

What do you think?

அன்பழகனின் உடலுக்கு மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி, கட்சி நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து !

‘இது மிகப்பெரிய இழப்பு’ அன்பழகனின் உடலுக்கு ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி!