தமிழக அரசு சார்பில் முதலமைச்சர் ஸ்டாலின் 5 கோடி நிவாரண நிதி..! நிர்மலா சீதாராமன் செய்த தேசதுரோகம்..! செல்வப்பெருந்தகை பேட்டி..!
சென்னை ராயப்பேட்டை தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்திபவனில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை இன்று செய்தியாளர்கள் சந்தித்து பேட்டி அளித்தார்.
வயநாடு நிலச்சரிவு நிவாரண நிதி :
அப்போது அவர் பேசியதாவது, கேரள நிலச்சரிவில் பல உயிர்கள் இழந்துள்ளது தொடர்ந்து 300 நபர்கள் காணவில்லை என அப்பகுதியில் தேடும் பணிகள் நடைபெற்று வருகிறது , உயிரிழந்தவர்களுக்கு தமிழக காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம். மீட்பு பணியை மிகவும் விரைந்து ஒன்றிய அரசு முடக்கி விட வேண்டும் , தேசிய பேரிடர் பாதுகாப்பு பணியினை அதிகப்படுத்த வேண்டும்.
இழப்பீடுகள் கணக்கில் எடுத்து கொள்ளாமல் எவ்வளவு கொடுத்தாலும் அது போதியதாக இருக்காது மீண்டும் கூடுதலாக வழங்க வேண்டும். முதலமைச்சர் தமிழக அரசுக்கு சார்பாக 5 கோடி ரூபாய் நிவாரண நிதியாக வழங்கியுள்ளார் அது வரவேற்க தக்கது , தமிழக காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஒரு கோடி ரூபாய் வயநாடு மக்களுக்கு உதவுவதற்கு வழங்க உள்ளோம் என செல்வப்பெருந்தகை கூறினார்.
நாடாளுமன்ற கூட்டத்தொடரில் ஒன்றிய அமைச்சர் அனுராக் தாகூர் உரையாற்றும் பொழுது காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி சாதி வாரிய கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் என கூறியதற்கு தன் சாதி என்னவென்று தெரியாதவர் சாதி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் என ஏன் கூறுகிறார். அவர் கிண்டல் அடித்தது வன்மையாக கண்டிக்கதக்கது, அதை போன்ற ஒரு ஆணவப்போக்கு அனைத்து பாஜக நிர்வாகிகளுக்கும் உள்ளது என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிறது என அவர் கூறினார்.
முன்பாக இஸ்லாமிய சகோதரிகள் சாஜின் பாத்தில் போராட்டம் நடத்திய பொழுது அனுரங்கு தாகூர் கடுமையான வார்த்தைகளில் பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக அவர் கூறினார்.
பாஜக தலைவர்கள் தேசத் தலைவர்கள் யாரேனும் உள்வாங்குவதில்லை தேவர் தலைவர்கள் இந்திய மக்களுக்கு என்ன போதனைகள் எழுதி வைத்துள்ளனர் என்பதை தெரியாத அரைவேக்காடு அனூரங் தாகூர் இப்படி பேசியது மிகவும் கண்டிக்கத்தக்கது என அவர் கூறினார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக ஒரு மீட்பு குழு அமைக்கப்பட்டுள்ளது கூடலூர் நீலகிரி கோயம்புத்தூர் ஆகிய பகுதிகளில் இருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் தொண்டர்கள் வயநாடு பகுதிக்கு மீட்பு பணியில் உதவுவதற்கு விரைந்து செல்கின்றனர்
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் தொழில் அதிபர்களுக்கு இந்த பேரிடரில் நேசகரம் அளிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கிறோம். தன்னுடைய நிதி மேலாண்மையினால் இன்று தேசத் தலைவரை நிமிர செய்தவர் மன்மோகன் சிங் அவரை பாஜக தலைவர்களுடன் ஒப்பிட்டு பேசக்கூடாது.
நிர்மலா சீதாராம் தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ள நிவாரண பணிகளை ஏன் பார்க்க வந்தீர்கள் பார்க்க வந்த பிறகு ஆலய வழிபாட்டிற்கு கோவிலுக்கு சென்று உண்டியலில் காசு போட வேண்டாம் அது அரசுக்கு சென்று விடும் அர்ச்சகரிடம் பணம் கொடுக்குமாறு கூறியது தேசத்துரோகம் என கூறினார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..