முதல்வர் ஸ்டாலின் அப்பலோ மருத்துவமனையில் அனுமதி..!!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று உடல்நல குறைவால் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் வழக்கமான உடல் பரிசோதனைக்காக முதலமைச்சர் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக கூறினர்.
மருத்துவ பரிசோதனைகள் முடிந்த பின்னரே அவர் வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.
இதுகுறித்து அமைச்சர் துரைமுருகன், எம்.பி ஆர்.டி. பாலு, தயாநிதி மாறன், உள்ளிட்டோர் இன்று காலை முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்துள்ளனர்.
மேலும் அவர் உடல் பரிசோதனை மற்றும் உடல் நலம் குறித்து மருத்துவர்களிடம் விசாரித்து வருவதாகவும் தெரிவித்தனர். சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டிருக்கும் முதலைமைச்சர் ஸ்டாலின் இன்று வீடு திரும்புவார் என்றும், அவர் உடல்நலம் சீராக உள்ளது எனவும் அப்பலோ மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் முதல்வரின் பாதுகாப்பிற்காக அமைச்சர்கள் உடனே இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்..