நிர்மலா சீதாராமனுக்கு கண்டனம் தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்..!!
மத்தியநிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது நாடாளுமன்ற உரையில் தமிழ்நாடு சட்ட பேரவையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவமான படுத்தப்பட்டு இருப்பதாக கூறி, முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மக்களவை மத்தியில் தமிழக அரசிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம்.., மற்றும் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆங்கில நாளிதழ் ஒன்றில் முதலமைச்சர் ஸ்டாலின் பேட்டி அளித்துள்ளார்.
1989ம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர் ஒருவரால் மறைந்த முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவனமான படுத்தப்பட்டது குறித்து நிர்மலா சீதாராமன் சில குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். அது குறித்து சில கேள்வியும் எழுப்பட்டுள்ளது.
அதற்கு பதிலளித்த முதலமைச்சர் ஸ்டாலின், நிர்மலா சீதாராமன் வாட்ஸ்அப்பில் வரும் கதைகளை அதிகம் படிப்பார்.., அதில் ஒன்று தான் இந்த கதை, அதை படித்து விட்டுத்தான் நிர்மலா சீதாராமன் இதை பேசி இருக்கிறார் என விமர்சித்துள்ளார்.
சட்டப்பேரவையில் அப்படி ஒரு சம்பவம் நடக்கவேயில்லை.., அது ஒரு சில சாதிக்காரர்களால் நடத்தப்பட்ட நாடகம்.., அது அங்கிருந்த அனைவருக்கும் தெரியும் என கூறினார். அதற்கு அப்போவே திருச்சி முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசு விளக்கம் கொடுத்துள்ளார். அதை நிர்மலா சீதாராமன் மறந்து விட்டது வருத்தமாக இருக்கிறது என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..