தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தமிழ் திரையுலகின் முன்னனணி தயாரிப்பு நிறுவனமான லட்சுமி மூவீ மேக்கர்ஸ் உடைய அதிபர்களுள் ஒருவரான திரு.கே.முரளிதரன் அவர்களுக்கு ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து பல படங்களில் சேர்ந்து பணியாற்றிய கே.முரளிதரன் உடல்நல குறைவால் நேற்று மதியம் 1:30 மணியளவில் உயிரிழந்தார். இவரின் உயிரிழப்பிற்கு பல அரசியல் தலைவர்கள் சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்தும் அவரின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்துவருகின்றனர்.
“தமிழ்த் திரையுலகின் முன்னணி படத்தயாரிப்பு நிறுவனமான லட்சுமி மூவீ மேக்கர்ஸ்-இன் அதிபர்களுள் ஒருவரான திரு.கே.முரளிதரன் அவர்கள் உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து வருத்தமடைந்தேன்.
1/2 pic.twitter.com/gTtEIEc6RO
— CMOTamilNadu (@CMOTamilnadu) December 2, 2022
இந்நிலையில் அவரின் குடும்பத்திற்கும் அவரின் உயிரிழப்பிற்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் ட்விட்டர் மூலம் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியீட்டுள்ள பதிவில், தமிழ்த் திரையுலகின் முன்னணி படத்தயாரிப்பு நிறுவனமான லட்சுமி மூவீ மேக்கர்ஸ்-இன் அதிபர்களுள் ஒருவரான திரு.கே.முரளிதரன் அவர்கள் உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து வருத்தமடைந்தேன். மேலும், அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கும் திரையுலக நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.