“என் உயிரினும் மேலான..” சொற்பொர் வீரர்களை வாழ்த்திய முதலமைச்சர் ஸ்டாலின்..!!
என் உயிரினும் மேலான என்ற தலைப்பில் பேச்சுபோட்டியில் பங்கேற்று முதல் மூன்று இடங்களை பிடித்த பேச்சாளர்களுக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசுகள் வழங்கி கெளரவித்தார்…
தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்..
அந்த வகையில் 234 சட்டமன்ற தொகுதிகளில் கலைஞர் நூலகம் திறந்திட வேண்டும் எனவும், நூற்றுக்கும் மேல் இளம் பேச்சாளர்களை தேர்வு செய்திட இளைஞர் அணிக்கு உத்தரவிட்டிருந்தார்..
அதன் படி தமிழ்நாடு துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், தி.மு.க இளைஞரணி சார்பில் “என் உயிரினும் மேலான என்ற தலைப்பில் பேச்சுப்போட்டியை அறிவித்திருந்தார்.
இந்த போட்டியானது நேற்று நடைபெற்றது., அதில் 500 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்., அதில் 150 பேர் சிறப்பாக பேசி போட்டியில் வெற்றி பெற்றனர்..
அதனை தொடர்ந்து இன்று சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் இறுதி கட்ட பேச்சுப் போட்டியில் தேர்வான இளம் பேச்சாளர்களை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் சந்தித்து பாராட்டினார்..
அதிலும் முதல் முன்று இடங்களை பிடித்த பேச்சாளர்களுக்கு ரொக்ககப்பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கி கெளரவித்தார். மேலும் முத்தமிழறிஞர் பதிப்பகத்தின் சார்பில் ஒன்பது நூல்களை வழங்கினார்..
இதில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மேயர் பிரியா, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..