சட்டப்பேரவையில் புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்..!
கிராமபுறங்களில் சாலைகள் மேம்பாடு குறித்து சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று 110 விதிகள் குறித்து பேசியுள்ளார். சட்டப்பேரவையில் அவர் பேசியதாவது. ”ஊரக பகுதியில் உள்ள சாலைகளை மேலும் மேம்படுத்தும் விதமாக ஒரு புதிய அறிவிப்பை வெளியிட உள்ளேன். அனைத்து மாவட்டங்கள் வளர்ச்சி, சமூக வளர்ச்சியே திமுகவின் இலக்காக செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.
நகரம் என்ற வேறுபாடு இல்லாமல் சாலை மேம்பாட்டை தமிழ்நாடு அரசு செய்து வருகிறது. தமிழ்நாட்டில் சுமார் 1 லட்சத்து 38 ஆயிரம் கிலோ மீட்டர் நீளமுள்ள கிராம சாலைகள், மற்றும் ஊராட்சி சாலைகள் உள்ளது. கிராம மக்கள் பொருளாதார வளர்ச்சிக்கு இந்த சாலைகள் அமைப்பு முக்கிய காரணியாக உள்ளது.
முதலீட்டுக்கும், ஊரக மக்களின் நலனுக்கும் நேரடி தொடர்பு உள்ளது. போக்குவரத்து சேவையை மேம்படுத்துவதற்கு ஊரக பகுதிகளில் வணிக பணிகளை அதிகப்படுத்துவது, அதன் மூலம் வேளாண் உற்பத்தியை அதிகரித்து ஊரக வளர்ச்சிக்கு வழி வகுக்கிற தரமான சாலைகள் கிராம மக்களின் வருமானத்தை உயர்த்தி வருகிறது.
ஏற்கனவே, கிராம ஊராட்சி சாலைகளை மேம்படுத்த 4,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதன் மூலம் தற்போது வரை 8 ஆயிரத்து 120 கிலோமீட்டர் நீளமுள்ள ஊரக சாலை பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. அடுத்த இரண்டு ஆண்டுகளில் முதல்வரின் கிராமசாலை திட்டத்தின் மூலம் கூடுதலாக மேலும் பத்தாயிரம் கிலோ மீட்டர் கிராம சாலைகள் 4,000 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்” என முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
பாமாகவுக்கு நோட்டீஸ் அனுப்பிய திமுக எம்.எல்.ஏக்கள்…! மன்னிப்பு கேட்கணும் இல்லைனா..?
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..