புதுச்சேரியில் முதலமைச்சர் ஸ்டாலின் தீவிர பிரச்சாரம்..!!
நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற கேள்வி நாளுக்கு நாள் மக்கள் மனதில் அதிகரித்து கொண்டே வந்தாலும் அதே சமையம் கட்சி வேட்பளார்களும் அதற்கு ஏற்றார் போல தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் திமுக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.., வடசென்னை நாடாளுமன்ற வேட்பாளர் கலாநிதி வீராசாமி அவர்களை ஆதரித்து கொருக்குப்பேட்டையில் நேற்று இரவு 7 மணியளவில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய அவர் எடப்படிய விமர்சனம் செய்து பேசினார், அப்போது அப்பகுதி மக்கள் அவரை வர வேற்று வீர வாழ் கொடுத்து வரவேற்றனர்.
புதுச்சேரியில் முதலமைச்சர் ஸ்டாலின் :
புதுச்சேரியில் ‘இந்தியா’ கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் எம்.பி. மீண்டும் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வாக்கு சேகரித்தார்.
பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர்களால் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் மட்டுமல்ல, பா.ஜ.க. கூட்டணி ஆளும் மாநிலங்களிலும் பிரச்சினைதான் என தெரிவித்தார்.
காவல்துறையினரின் பதிவிக்காலம் முடிந்ததும் அவர்களுக்கு ஆளுநர் பதவி வழங்கி, பாஜக.வின் ஏஜெண்டுகளாக மாற்றி, அவர்களை விளம்பரத்துக்காக பயன்படுத்துவதாக முதலமைச்சர் ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.
பாஜகவிற்கு அனைவரும் அவர்களுக்கு கீழ் இருக்க வேண்டும் என்ற எண்ணம் அதாவது டெல்லி கோட்டையை இவர்களுக்கு கீழ் இருக்க வேண்டும் என்பதுதான் பாஜகவின் அஜெண்டா என்றும் அதனால் தான் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தரவில்லை எனவும் தெரிவித்தார்.
மதம், சாதியின் பெயரால் பிரசாரம் செய்யும் பிரதமர் மோடி, ஏன் சமூகநீதி, இடஒதுக்கீடு, பெண்கள் உரிமை குறித்து பேச மறுக்கிறா. மக்களுக்காக ஆட்சி நடத்தாமல், கார்ப்பரேட் கம்பெனி களுக்காக பிரதமர் மோடி ஆட்சி நடத்துவதாகவும் விமர்சித்தார்.
தமிழ்நாட்டில் பல்வேறு திட்டங்களை நாங்கள் பல்வேறு அசத்தலான திட்டங்களை கொண்டு வந்துள்ளோம். அது போன்ற திட்டங்கள் உங்களுக்கும் கிடைக்க வேண்டுமென்றால், நம் கூட்டணி வேட்பாளர் வைத்திலிங்கத்திற்கு வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள்
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..