இன்று மறைந்த திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகனின் 2-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.
தூத்துக்குடியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மறைந்த திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகனின் அவரின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தமிழகம் முழுவதிலும் பல இடங்களில் அன்பழகன் படத்திற்கு திமுகவைச் சேர்ந்தவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இது குறித்து முதலவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “திராவிடமே தன் உயிரெனக் கொண்டவர்; தமிழன் யாருக்கும் தாழ்ந்தவனில்லை என மேடைதோறும் முழங்கியவர்; தலைவர் கலைஞரின் உற்ற தோழர்; என் பொதுவாழ்வுப் பயணத்தில் அரணாகவும் ஆசானாகவும் விளங்கிய இனமானப் பேராசிரியரின் 2-ஆம் ஆண்டு நினைவுநாளில் அவருக்கு என் புகழ்வணக்கத்தை உரித்தாக்குகிறேன்” என பதிவிட்டுள்ளார்.