நெல்லைக்கு முதலமைச்சர் வருகை…!! விதிக்கப்பட்ட தடை..!!
நெல்லையில் முதலமைச்சர் வருகையொட்டி இன்று முதல் 3 நாட்களுக்கு டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டம் தோறும் களஆய்வு மேற்கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறார். அந்த வகையில் நாளை நெல்லை மாவட்டத்தில் கள ஆய்வு மேற்கொண்டு பின்னர் கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் நடைபெறுகின்ற நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளார்.
இதுதொடர்பாக வெளியான செய்திக்குறிப்பில், வருகின்ற பிப்ரவரி 7ம் தேதி பாளையங்கோட்டை மருத்துவக்கல்லூரி மைதானத்தில் நடைபெறுகின்ற விழாவில் பல்நோக்கு மருத்துவமனை மற்றும் மார்க்கெட் உள்ளிட்ட கட்டிடங்களை திறந்து வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
முதலமைச்சரின் வருகையையொட்டி நெல்லை மாவட்டத்தில் பாதுகாப்பு சம்மந்தமாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதேபோல் கங்கைகொண்டான் சிப்காட் தொழிற்பேட்டையை சுற்றியுள்ள 5 கிலோமீட்டர் சுற்றளவிற்கு டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் தடையை மீறி டிரோன்கள் பறக்க விடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் ஆய்வாளர் சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..