குழந்தை வரம்…. புத்திர காமெடிஸ்ரர் ஆலயத்தில் 300-க்கும் மேற்பட்டோர் யாகம்…!
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணிக மண்டல நாக நதி ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க புத்திர காமெடிஸ்ரர் ஆலயத்தில் தசரத மகா சக்கரவர்த்தி குழந்தை வரம் வேண்டி யாகம் நடத்திய பிறகுதான் சிவன் பிறந்தார் என்று ஐதீகம்.
இதனால் இந்த ஆலயத்தில் சிவனுக்கு நேர் எதிரில் தசரத மகா சக்கரவர்த்தி சிலை அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் ஆனி மாதம் பௌர்ணமி தினத்தன்று திருமணம் ஆகி குழந்தை இல்லாத கணவன் மனைவி இந்த ஆலயத்தில் யாகம் செய்தால் குழந்தை பாக்கியம் உண்டாகும் என்ற நம்பிக்கை உள்ளது.
இந்த ஆண்டு ஆனி மாத பௌர்ணமி தினமான நேற்று திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து சுமார் 300க்கும் மேற்பட்ட குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியர்கள் இந்த புத்திர காமெடிஸ்ரர் யாகத்தில் கலந்து கொண்டனர்.
அதேபோன்று கடந்த ஆண்டுகளில் இந்த ஆலயத்தில் குழந்தை பாக்கியம்வேண்டி யாகம் செய்து கோரிக்கை நிறைவேறிய தம்பதியினர் இந்த ஆலயத்திற்கு வந்து பரிகாரம் நிவர்த்தி ஆனதற்கு அபிஷேகம் ஆராதனை செய்து வழிபட்டனர். மேலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
-பவானி கார்த்திக்