குழந்தை தொழிலார்கள் சித்திரவதை…!! உரிமையாளருக்கு போலீஸ் வலை வீச்சு…!!
திருப்பூர் லட்சுமி நகர் பகுதியில் 2000க்கும் மேற்பட்ட பின்னலாடை தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன, பொங்கல் பண்டிகைக்கு ஆடை தயாரிப்பு நிறுவனங்கள் தொடர்ந்து ஒரு வாரம் விடுமுறை அறிவித்திருந்தது. இதனால் திருப்பூர் மாநகரில் குறைவான அளவில் தொழிற்சாலைகளில் செயல்பட துவங்கின.
இந்த நிலையில் பின்னலாடை தயாரிப்பிற்கு பயன்படக்கூடிய உப தொழிலான பட்டன், ஜீப் தொழிற்சாலை உள்ளது. இதில் ஏராளமான குழந்தை தொழிலாளர்களை பணியமர்த்தி குழந்தைகளை கடுமையாக தாக்கி காயங்கள் ஏற்படுத்தி வருவதாகவும் துன்புறுத்தி வருவதாகவும் மாவட்ட குழந்தைகள் நல அலுவலகத்திற்கு புகார் வந்ததை அடுத்து, அங்கு சென்ற மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு குழுவினருடன் வடக்கு காவல் நிலைய போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது பீகார் மாநிலத்தை மாநிலத்தைச் சேர்ந்த 4குழந்தை தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளது உறுதி செய்தனர், அதனை அடுத்து போலீசார் 4குழந்தை தொழிலாளர்களை மீட்டு மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவல ரிடம் ஒப்படைத்தனர் அவர்கள் குழந்தை தொழிலாளர்களை அருகிலுள்ள காப்பகத்திற்கு அழைத்துச் சென்று சேர்த்தனர்.
இந்த பட்டன் ஜிப் தொழிற்சாலையின் உரிமையாளர் முஸ்லிம் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து வடக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர், மேலும் தலைமறைவாக உள்ள ஜிப் கம்பெனி உரிமையாளரான பிஹார் மாநிலத்தைச் சார்ந்த முஸ்லிம் என்பவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
திருப்பூர் லட்சுமி நகர் பகுதியில் உள்ள பட்டன் ஜீப் நிறுவனத்தில் நான்கு குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..