சிறார் ஆபாச படம்; புதிய லிஸ்ட் ரெடி!

சென்னையில் சிறார் ஆபச படம் பார்த்தவர்களின் புதிய பட்டியலில் 600 பேர் இடம்பிடித்துள்ளனர்.

சிறுவர்கள், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதற்கான காரணங்களில் முதன்மையானதாக இருப்பது ஆபாச படங்கள். இதற்காகவே இயங்கும் வலைதளங்களில் சிறார்களின் ஆபாச படங்கள் பார்ப்பதும் பகிர்வதும் சட்டப்படி குற்றமாகும். இதனால் இதை தடுக்கும் வகையில் காவல்துறை சார்பில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

ஏற்கெனவே சிறார் ஆபாச படங்கள் பார்த்தவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டிருந்தது, இந்நிலையில் தற்போது சிறார் ஆபாச படம் பார்த்ததாக, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு போலீசார், தமிழகம் முழுவதும் புதிதாக, 600 பேரின் பட்டியலை தயாரித்துள்ளனர். இப்பட்டியல் சென்னை உட்பட தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட போலீசாருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் உள்ளவர்கள் அனைவர் மீதும் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் புதிய பட்டியலில் உள்ள 600 பேர் மீதும் விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

What do you think?

ஈரானில் சிக்கியுள்ள மீனவர்களை மீட்க முதலமைச்சர் கடிதம்

‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ – காதலும், ஹைடெக் திருடர்களும்!