தொடரும் சோகம்; கொரோனா வைரஸ் பலி 717 ஆக அதிகரிப்பு!!!

சீனாவில் இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 717 ஆக அதிகரித்துள்ளது.

சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள வுஹான் நகரத்தில் இருந்து உருவாகிய கொரோனா வைரஸ், தற்போது அந்நாடு முழுவதும் பரவியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் இறுதியில் இருந்து இன்று வரை 34,000 பேர் இந்த வைரஸால் பாதிப்படைந்துள்ளனர். இவர்களை காப்பாற்ற தருப்பு மருந்துகளை கண்டறியும் சோதனைகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், வுஹான் உள்ளிட்ட சீன நகரங்கள் அனைத்தும் முழுவதுமாக சீல் வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், கொரோனா வைரஸ் தாக்கியதில் பலியானவர்களின் எண்ணிக்கை 717 ஆக அதிகரித்துள்ளது. தொடரும் கொரோனா வைரஸ் உயிரிழப்புகளால் அந்நாட்டு மக்கள் பீதியில் உறைந்து போய் உள்ளனர்.

What do you think?

இந்தியா-இலங்கை குறித்த பேச்சுவார்த்தையில் மகிந்த ராஜபக்சே

மீண்டும் அதிகரித்த தங்கம் விலை..!