40 வருடங்களுக்கு முன்பே கொரோனா எச்சரிக்கை; அதிர்ச்சி தகவல் அம்பலம்!!!

கொரோனா வைரஸ் குறித்து, 1981 ஆம் ஆண்டில் வெளிவந்துள்ள ஒரு புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல் தற்போது வைரலாகி வருகிறது.

சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள வுகான் நகரில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் உருவாகியது கொரோனா வைரஸ். இந்த கொடூர வைரஸ் இதுவரை 25க்கும் மேற்பட்ட நாடுகளுக்கும் பரவி மக்களை மிரட்டி வருகிறது. சீனாவில் மட்டும் இதுவரை 1,868 பேர் கொரோனா தாக்கியதில் உயிரிழந்துள்ளனர். மேலும், பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் 40 ஆண்டுகளுக்கு முன்பே வுஹானில் பரவிய கொரானா வைரஸ் குறித்து, ஒரு புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 1981 ஆம் ஆண்டில் டீன் கூன்ட்ஸ் எழுதிய த்ரில்லர் நாவலான தி ஐஸ் ஆஃப் டார்க்னஸ் என்ற புத்தகத்தில், வுஹான்-400 என்ற பெயர் கொண்ட வைரஸ் பற்றி எழுதப்பட்டுள்ளது..
இந்த நாவலில் வுஹானில் இருக்கும் ஒரு ஆய்வகத்தில் வைரஸை ஒரு ஆயுதமாக பயன்படுத்துவதற்காக தயாரிக்கப்படுவது போல் குறிப்பு உள்ளது.

தற்போது இந்த புத்தகத்தை குறிப்பிட்டு டேரன் ப்ளைமவுத் என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ‘இது நாம் வாழும் ஒரு விசித்திரமான உலகம்’ என்று தலைப்பிட்டு, புத்தகத்தில் உள்ள வுஹான்-400 வைரஸ் குறித்த தகவல்களை சுட்டிக்காட்டியுள்ளார். அவரின் இந்த பதிவு தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

What do you think?

தங்கம் விலை நிலவரம்

குளத்திற்குள் சரிந்த 8 வீடுகள்; வீட்டில் இருந்தவர்கள் உயிர் தப்பிய அதிசயம்!