கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கு உதவும் சீனா!

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கு உதவ சீனா முன்வந்துள்ளது .

சீனாவின் வுஹான் நகரிலிருந்து பரவிய அந்த கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் வேகமாக பரவிய கொரோனா வைரஸ் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை பாதித்தது. 3,270 பேர் இதில் உயிரிழந்தனர்.

ஆனால், அந்நாட்டு அரசாங்கத்தின் தீவிர நடவடிக்கையால் கொரோனா தற்போது அங்கு கட்டுக்குள் வந்துள்ளது. 72,703 பேர் சிகிச்சையில் பலன் பெற்று வீடு திரும்பினர். இன்னும் 5,120 பேர் மட்டுமே கண்காணிப்பின் கீழ் சிகிச்சையில் உள்ளனர். சீனா தங்கள் நாட்டில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்ததை பார்த்து மற்ற நாடுகள் வியப்படைந்துள்ளன. அதேசமயம் கொரோனாவை கட்டுப்படுத்திய சீனா தற்போது மற்ற நாடுகளுக்கு உதவி செய்ய முன்வந்திருக்கிறது.

அந்திவகையில் முதல் கட்டமாக இந்தியா உட்பட 19 நட்புறவு நாடுகளுக்கு உதவிக்கரம் நீட்ட சீனா முன் வந்துள்ளது. இதில் இந்தியாவும் ஒன்று. வுஹான் மாகாணத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் உச்சத்தில் இருந்தபோது, இந்திய அரசு சார்பில் முகக்கவசம் உட்பட 15 டன்கள் மருத்துவ சாதனங்கள் ராணுவ விமானம் மூலம் அளிக்கப்பட்டன. அதற்கு நன்றிக்கடன் செலுத்தும் வகையில் தற்போது இந்தியாவிற்கு உதவ சீன முன்வந்திருக்கிறது.

கொரோனாவை கட்டுப்படுத்த தாங்கள் பயன்படுத்திய யுக்தியை 19 நாடுகளுக்கும் சீன வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் கெங் ஷாவுங் காணோளி சிறப்புக் கூட்டம் மூலம் பகிர்ந்துக்கொண்டார்.

What do you think?

வீட்டிலிருந்தபடியே வேலை செய்வோருக்காக ஜியோவின் அதிரடி Offer!

கொரோனா நிவாரண நிதியாக ஒரு மாத சம்பளம்! – வைகோ அறிவிப்பு