‘சீனாவில் கொரோனா வைரஸ் நோயாளிகள் தங்கிருந்த ஹோட்டல் இடிந்தது’ 4 பேர் பலி!

சீனாவின் வுஹான் நகரிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் அச்சுறுத்தி வருகிறது. இதுவரை சீனாவில் மட்டும் 3,097 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 80,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளவர்களை பெய்ஜிங்கில் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதற்காக ஹோட்டல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் ஏராளமானோர் தங்கிருந்தனர்.

இந்நிலையில், நேற்றிரவு இந்த ஓட்டல் திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் 4 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 71 பேர் சிக்கினர் அவர்களில் 42 பேர் மீட்கப்பட்டு உள்ளனர். மீதமுள்ளவர்களை தேடும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.மேலும் இது குறித்து விசாரணை நடத்திய போலீசார் போலீசார் ஹோட்டல் உரிமையாளரை கைது செய்துள்ளனர்.

What do you think?

சாதனைப் பெண்களுக்கு விருது வழங்கிய குடியரசுத் தலைவர்

நாளை கூடுகிறது சட்டமன்ற கூட்டத்தொடர் – சிஏஏவுக்கு எதிராக தீர்மானம்?