February 27, 2020
Madhimugam
Exclusive Today Trending உலகம்

‘கோவிட்-19’ என பெயர் மாறிய கொரோனாவால்; சீன அதிபருக்கே இந்த நிலைமையா?

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலால் ஒரே நாளில் 242 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 1,350-ஐ தாண்டியுள்ளது.

மத்திய சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள வுகான் நகரில் முதன் முதலில் பரவிய கொரோனா வைரசுக்கு, தற்போது ‘கோவிட்-19’ என்று பொதுவான பெயரை உலக சுகாதார அமைப்பு சூட்டியுள்ளது. கொரோனா வைரஸ் டிஸீஸ் 2019 என்பதன் சுருக்கமே கோவிட் – 19 என்பதாகும். சீனாவில் இந்த வைரஸ் தாக்குதலால் பலியாகும் மக்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் பலி எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது. வைரஸ் தாக்கும் அபாயம் காரணமாக, சீன நாட்டு மக்கள் வெளியே வர பயந்து வீடுகளில் முடங்கிக் கிடக்கின்றனர்.

சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் ரகசிய இடத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு இருக்கிறார். சீனாவில் இந்நோயை கட்டுப்படுத்த, உலக சுகாதார அமைப்பைச் சேர்ந்த மருத்துவ நிபுணர்கள் குழுவும் நேற்று முன்தினம் களமிறங்கியது. சீனாவில் ஹூபே மாகாணத்தில்தான் உயிர் பலி அதிகமாக இருக்கிறது. சீனாவில் சுமார் 50,000 பேருக்கு கோவிட்-19 வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஒரே நாளில் 242 பேர் உயிரிழந்த நிலையில், வைரஸ் பாதிப்பிற்கு பலியானோர் எண்ணிக்கை இன்று 1,350-ஐ கடந்துள்ளதாக சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.

Related posts

ஏப்ரல் 14 ஆம் தேதி கட்சி பெயரை அறிவிக்கும் ரஜினி..!

Digital Team

டெல்லியில் சி.ஏ.ஏ. எதிர்ப்பு- மோதலில் பலி எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு…!

superadmin

கொரோனா வைரஸ் உயிரிழப்பு 1,110 ஆக அதிகரிப்பு!

Digital Team

மும்பையில் 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுக்கள் பறிமுதல்..!

Digital Team

11 எம்.எ.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம்

Digital Team

‘செருப்பை கழட்டி விடுடா’ – கட்டளையிட்ட அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்!

superadmin
You cannot copy content of this page
Madhimugam