சின்ன கலைவாணர் விவேக் 59..!! சினிமாவின் மறுபக்கத்தில் விவேக்..!!
காமெடி நடிகரும் சமூக ஆர்வலருமான மறைந்த சின்ன கலைவாணர் விவேக் அவர்களின் பிறந்தநாள் இன்று.., இதுவரையில் சினிமாவில் நடிகராக மட்டுமே நீங்கள் பார்த்திருந்த விவேக் அவர்களின் மறுமுகம் பற்றி இதில் பார்க்கலாம்.
மனதில் உறுதி வேண்டும் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நம்ப சின்ன கலைவாணர் விவேக். 1987ம் ஆண்டு பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான இந்த படம் 100 நாட்கள் ஓடியது.., அதன் பின் 1989ம் ஆண்டு பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான படம் தான் “புது புது அர்த்தங்கள்” நடிகர் ரஹ்மான், சித்தாரா, கீதா, செளகர் ஜானகி உள்ளிட்ட பலரும் நடித்து வெளியான இந்த படம் 100 நாட்களுக்கு மேல் ஓடியது.
இந்த படம் நடிகர் விவேக்கிற்கு வெற்றி வாய்ப்பை கொடுத்தது அதில் அவர் பேசிய வசனம் “இன்னைக்கு செத்தா நாளைக்கு பால்” என்ற வசனம் அனைவரிடமும் வரவேற்பை பெற்றது., இந்த படத்திற்கு பின் அவருக்கு அடுத்தது பல பட வாய்ப்புகள் கிடைத்தது என சொல்லலாம்.
இதனால் தான் பார்த்து வந்த வங்கி வேலையை விட்டு சினிமாவில் முழுநேர நடிகராக நடிக்க தொடங்கினார். 80ஸ் களில் வெளி வந்த படம் முதல் தற்போது உள்ள 2கே கிட்ஸ் படம் வரை கிட்ட தட்ட 225க்கும் மேற்பட்ட படத்தில் நடித்துள்ளார்.
நடிகர் விவேக் மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே.அப்துல்காலமின் தீவிர பக்தர் என்று சொல்லலாம் காரணம் ஏ.பி.ஜே.அப்துல்காலம் அவர்கள் சொன்ன வார்த்தைகளை பின்பற்றியவர் இவர் குறிப்பாக மரம் கன்றுகளை நடுவது..
இதுவரை நடிகர் விவேக் 30 லட்சம் மரக்கன்றுகளை நட்டுள்ளார் என்பது குறிப்பிடதக்கது,
இவர் மறைந்த பின்னரும் இவரின் கனவுகளை நடிகர் விவேக்கின் ரசிகர்கள் நிறைவேற்றி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ரன் : படத்தில் இவர் பேசிய இந்த வசனம் தான் இன்று வரை நாம் பிள்ளைகளுக்கு சொல்லி கொடுக்க வேண்டிய ஒன்று என சொல்லலாம் காரணம்
“பெற்றவர்கள் பேச்சை கேட்காமல் மற்றவர்கள் பேச்சை கேட்டால்” என்றும் நாம் தனியாக நிற்க வேண்டும் என்பதை அழகாக சொல்லி இருப்பார்.
படத்தில் காதலித்து திருமணம் செய்வதும் தவறு இல்லை.., ஆனால் அந்த காதலால் தங்கள் வாழ்க்கையை தொலைத்து கொள்வது தான் தவறு,
ஒரு இளைஞன் தவறான பாதையில் செல்கிறான் என்றால் அதற்கு பெற்றோரும் ஒரு வகை காரணம் அவர்களை கண்டித்து மட்டும் வளர்க்காமல் அவர்களிடம் நண்பர்களை போல பழக வேண்டும் என சொல்லி இருப்பார்.
படத்தின் மூலம் ஜாதிகள் பார்த்து ஒருவரை ஒதுக்க கூடாது என்றும் நெகிழி போன்ற
பிளாஸ்டிக் பொருட்களை எரித்தால் ஓசோன் லேயரில் ஓட்டை விழும் என்ற கருத்தையும் சொல்லியவர் இவர்.
படத்தின் மூலம் நாட்டிற்கு ஒரு நல்லது செய்ய யாராவது முன் வந்தால் அவர்களை யாரும் செய்ய விட மாட்டார்கள்,
எதிலும் ஊழல் எங்கும் ஊழல் என்ற கருத்தை பதிவிட்டு இருப்பார்.
இப்படி பல படங்களில் கருத்து சொன்னாலும் யூத் படத்திலே இவருக்கு கருத்து கந்தசாமி என்ற பெயர் கிடைத்தது.
இந்த படத்தில் கூட சங்கிலி திருடர்கள் கொள்ளை அதிகரித்து இருப்பதை பற்றி நடித்து இருப்பார்.
பல பாடங்களில் காமெடியனாகவும், சில படங்களில் ஹீரோவாகவும் நடித்த இவர் மீசையை முறுக்கு படத்தின் மூலம் “அப்பா” கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார். இந்த படத்தின் மூலம் இவர் 2கே கிட்ஸ் இளைஞர்களையும் கவர்ந்து இருப்பார்.
இங்கிலிஷ் மட்டுமே பேச வேண்டும் தமிழில் பேசினால் சில பள்ளிகளில் அபராதம் விதிப்பதை பற்றி அழகாக சொல்லி இருப்பார் “ஆங்கிலம் பள்ளி என்றால் அதில் ஆங்கிலத்தில் மட்டுமே பேச வேண்டிய அவசியம் இல்லை என்றும் ஆங்கில வழியில் கல்வி என்றும் சொல்லி இருப்பார்”
நாம் கனவில் ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணம் மனதில் உறுதியாக இருக்க வேண்டும் அதே சமயம் கல்வியும் முக்கியம், படிப்பிற்காக கனவையோ, கனவிற்காக படிப்பையோ தொலைத்து விட கூடாது என்ற கருத்தை அழகாக சொல்லி இருப்பார்.
நடிகர் ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம், பார்த்திபன், ஜெயம்ரவி முதல் ஹிப்பாப் ஆதி வரை பல நடிகர்களுக்கு நண்பனாக, குணச்சித்திர நடிகராக, அப்பாவாக நடித்துள்ளார். இதுவரையில் இவர் தமிழில் மட்டும் 225 படங்களில் நடித்துள்ளார்.. இதுவரையில் இவர் பெற்றுள்ள விருதுகள்
2002ம் ஆண்டு ரன் படத்திற்காக சிறந்த நகைச்சுவை நடிகருக்கான பிலிம்பேர் விருது,
2003ம் ஆண்டு சாமி படத்தின் மூலம் சிறந்த நகைச்சுவை நடிகருக்கான பிலிம்பேர் விருது,
2004ம் ஆண்டு பேரழகன் படத்திற்கான சிறந்த நகைச்சுவை நடிகருக்கான பிலிம்பேர் விருது,
2007ம் ஆண்டு சிவாஜி படத்திற்கான சிறந்த நகைச்சுவை நடிகருக்கான பிலிம்பேர் விருதுகள் வாங்கியுள்ளார்.
2002ம் ஆண்டு ரன் படத்திற்காக சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருதும்,
2003ம் ஆண்டு பார்த்திபன் கனவு படத்திற்காக சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருதும்,
2007ம் ஆண்டு சிவாஜி படத்திற்காக சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருதுகளை வாங்கியுள்ளார்.
அதன் பின் தேசிய விருதுகள்,
சிறந்த நகைச்சுவை நடிகருக்கான பலவகை திரைப்பட விருதுகள்
சிறப்பு சான்றாயர் விருது, ஏசியாநெட் திரைப்பட விருதுகள், எடிசன் விருதுகள்
கொடைக்கானல் பண்பலை வானொலி விருதுகள்
ஜ.டி.எஃப்.ஏ (ITFA) சிறந்த நடிகருக்கான விருது என 100 க்கும் மேற்பட்ட விருதுகளை வாங்கியுள்ளார்.
பத்மஸ்ரீ விருதும் இந்திய அரசு விருதும் நகைச்சுவை நடிகருக்கான விருது மட்டுமின்றி சமூக ஆர்வலருக்கான விருதும் வாங்கியுள்ளார்.
ஒரு நகைச்சுவை நடிகராக நம்மை சிரிக்கவும் வைத்து சிந்திக்கவும் வைத்து மரக்கன்றுகளை நட்டால் இயற்கை மட்டும்மல்ல நம் இனமும் வளரும் என புரிய வைத்த சின்ன கலைவாணர் “விவேக்” அவர்களை பற்றிய இந்த கட்டுரை பதிவிடுவதில் மதிமுகம் என்றும் பெருமை கொள்கிறது…
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..