கொரோனாவை ஓவர்டேக் செய்யும் காலரா – உஷார் மக்களே உஷார்..!

இந்தியா முழுவதும் கொரோனா அச்சத்தில் இருக்க பெங்களூருவில் கொரோனாவுக்கு சவால் விடுக்கும் வகையில் காலரா நோய் பரவி வருகிறது.

சீனாவில் கடந்த டிசம்பர் மாதம் உருவாகிய கொரோனா வைரஸ், தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா நோய் தொற்றால் சிலர் பாதிப்படைந்துள்ள நிலையில், பெங்களூருவில் காலரா நோய் தனது வேலையை காட்ட ஆரம்பித்துள்ளது. கடந்த வாரத்தில் மட்டும் 6 பேருக்கு அந்த நோய் பரவியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. .

காலாராவால் பாதிக்கப்பட்ட அனைவரும் பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காலரா தொற்றிலிருந்து தற்காத்துக்கொள்ள முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என பொதுமக்களை மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

What do you think?

ஈரானில் சிக்கியுள்ள தமிழக மீனவர்களை மீட்க முதலமைச்சரிடம் மனு

தங்கம் விலை கிடு கிடு உயர்வு..!