மேக்கப்பில் கன்சீலரை எப்படி தேர்வு செய்றதுனு பார்க்கலாமா..!
மேக்கப் போடும்போது கன்சீலரானது ரொம்ப அடிப்படையான ஒன்றாகும். முகத்தில் உண்டாகும் தழும்புகள், கண்களின் கீழ் இருக்கும் கருவளையம் மறைய கன்சீலர் பயன்படுத்தலாம்.
அந்தந்த வகையான சரும நிறத்திற்கு ஏற்ப பலவகையான கன்சீலர் இருக்கிறது. அதனை எப்படி தேர்வு செய்யலாம் என பார்க்கலாம்.
கண்களின் கீழ் இருக்கும் கருவளையத்தை மறைப்பதற்கு ஒரு மென்மையான சில்கியான கன்சீலரை பயன்படுத்தலாம். இப்படி பயன்படுத்தினால் தான் அது சருமத்தின் நிறத்துடன் கலந்து இயல்பான தோற்றம் கிடைக்கும். சருமத்தில் இருக்கும் துளைகளை அடைக்காதது போல கன்சீலரை தேர்ந்தெடுக்க வேண்டும்.
ஸ்டிக் கன்சீலர்:
ஸ்டிக் கன்சீலர் பயணம் செய்யும்போது ஈசியாக இருக்கும். இந்தவகை கன்சீலர் டச்அப் செய்து கொள்ளவும் ரொம்ப சுலபமாக இருக்கும். முகப்பரு சருமம் மற்றும் எண்ணெய் பசை சருமத்திற்கு இது ஏற்றது. இந்தவகையில் அதிக வகை பிக்மென்டேஷன் இருப்பதால் இது சருமத்தில் இருப்பவற்றை சுலபமாகவும் முழுவதுமாகவும் மறைக்கும்.
லிக்விட் கன்சீலர்:
பெண்கள் அதிகமாக தேர்வு செய்யும் ஒரு வகை கன்சீலர் இதுதான். இதனை எண்ணெய் பசை சருமம், வறண்ட சருமம், இரண்டும் கலந்த சருமம் என அனைத்து வகை சருமத்திற்கும் இது ஏற்றது. இந்தவகை லிக்விட்டாக இருக்கும் எனில் பயன்படுத்த ஈசியாக இருக்கும். லிக்விட் கன்சீலர் வைத்து கரும்புள்ளி, கருவளையம் ஆகியவற்றை சுலபமாக மறைக்கலாம்.
கிரீம் கன்சீலர்:
கிரீம் கன்சீலர் என்பது வறண்ட சருமத்திற்கு ஏற்ற ஒரு வகையாகும். இது அடர்த்தியானதால் சருமத்தில் இருக்கும் நிறமாற்றம், கரும்புள்ளிகள் ஆகியவற்றை மறைக்க சிறந்த தீர்வாக இருக்கும்.
பயன்படுத்தும் முறை:
முதலில் முகத்தில் மாய்ஸ்சரைசர் மற்றும் அண்டர் ஐ கிரீம் பயன்படுத்த வேண்டும். அப்போது தான் கன்சீலர் ஈசியாக அப்ளை செய்ய முடியும். தேவைப்படும் இடத்தில் கண்சீலர் கொண்டு பூசி ஸ்பாஞ்ச் கொண்டு பிளண்ட் செய்ய வேண்டும். பின் லைட்டான செட்டிங் பவுடர் கொண்டு தடவினால் நாள் முழுக்க மேக்கப் சூப்பராக இருக்கும். இதே முறையை நிறம் மாறிய இடத்திலும் பயன்படுத்தலாம்.