அன்புச்செழியன் வருமானவரித்துறை அலுவலகத்தில் ஆஜர்

சென்னையில் உள்ள வருமானவரித்துறை அலுவலகத்தில் சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் விசாரணைக்கு நேரில் ஆஜரானார்.

ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிகா் விஜய் நடிப்பில் வெளியான ‘பிகில்’ திரைப்படம் மூலம் 300 கோடி ரூபாய் லாபம் கிடைத்ததாக செய்திகள் வெளியானது. இதுதொடர்பாக ஏஜிஎஸ் நிறுவனத்திலும் பிரபல சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

அப்போது நெய்வேலியில் படப்பிடிப்பில் இருந்த நடிகர் விஜய்யை அழைத்து வந்து, அவரது வீட்டில் கிட்டத்தட்ட 23 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை நடத்தினர். அன்புச்செழியனுக்குச் சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனையின்போது கணக்கில் வராத 77 கோடி ரூபாய் பணம், ஆவணங்கள், 300 கோடி ரூபாய்க்கான வரி ஏய்ப்பு சான்றுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்நிலையில், 165 கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு செய்ததற்கும், கைப்பற்றப்பட்ட 77 கோடி ரூபாய்க்கும் முறையாக வரி செலுத்த பைனான்சியர் அன்புச்செழியன் ஒப்புக்கொண்டுள்ளதாக வருமானவரித்துறை தெரிவித்தது. அவரைப் போலவே ஏஜிஎஸ் குழுமத்தினரும் ஒப்புக்கொண்டனர்.

இதுதொடர்பாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரித்துறை புலனாய்வுப் பிரிவில், கடந்த வாரம் நடிகர் விஜய்யின் ஆடிட்டர் ஆஜரானார். இந்நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரித்துறை அலுவலகத்தில் விசாரணைக்காக பைனான்சியர் அன்புச்செழியன் இன்று ஆஜரானார்.

What do you think?

டி.என்.பி.எஸ்.சி முறைகேடு; மீண்டும் சிபிசிஐடி விசாரணை

தங்கம் விலை நிலவரம்