“சினிமா டூ அரசியல்” தவெக தலைவர் விஜய் கடந்து வந்த பாதை..!! விஜய் எனும் மூன்றெழுத்து..!!
தளபதி விஜய் அவர்களின் தந்தை SA.சந்திரசேகர் ஒரு இயக்குனர் என்பதால் தன்னுடைய மகனான விஜய் அவர்களை குழந்தை நட்சத்திரமாக “வெற்றி” என்ற படத்தில் அறிமுகமனார்..
முதல் படம் :
அதன் பின்னர் முதன் முதலில் கதாநாயகனாக “நாளைய தீர்ப்பு..” என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.
ஆனால் அந்த படம் அவருக்கு வெற்றி கொடுக்கவில்லை அதன் பின்னர் விஜய்காந்த் அவர்களுக்கு தம்பியாக “செந்தூரபாண்டி” என்ற படத்தில் நடித்தார்.. அது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது..
அதன் பின்னர் 1996ம் ஆண்டு வெளிவந்த பூவே உனக்காக என்ற படம் 100 நாட்களுக்கும் மேல் ஓடி நல்ல வரவேற்பை பெற்றது. அந்த படத்தில் இருந்து இவருக்கென்று தனி ரசிகர்கள் கூட்டம் உருவாக ஆரம்பித்தது என சொல்லலாம்..
இப்போது எல்லாம் நமக்கு பிடித்த நடிகர் நடிகையர்களை சமூக வலைதளங்களில் டாக் செய்து அவர்களுக்கான போஸ்ட் போடுகிறோம்.. ஆனால் 90ஸ் காலத்தில் எல்லாம் கடிதம் மட்டுமே..
இளைய தளபதி பட்டம் :
அப்படி அன்றைய காலத்தில் விஜய் அவர்களுக்கு எழுதும் அனைத்து கடிதங்களையும் அவர் படித்து வந்துள்ளார்.. அப்படி ரசிகர் ஒருவர் அவர் எழுதிய அனைத்து கடிதங்களிலும் “இளைய தளபதி” என குறிப்பிட்டுள்ளார்..
அதன் பின்னர் “காதலுக்கு மரியாதை” என்ற படத்தில் இருந்து அவருக்கு “இளைய தளபதி விஜய்” என அழைக்கப்பட்டார்.. அதன் பின்னர் பல காதல் படங்கள் வந்தாலும் காதல் கலந்த ஆக்ஷன் படமாக “திருமலை”, “கில்லி” வெளியானது.. அதன் பின்னர் இவருக்கு என்று ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது என சொல்லலாம்.. அன்று முதல் இன்று வரை தளபதி விஜய் என்றால்., அவருடைய படங்களுக்கு ரசிகர்கள் தரும் ஆதரவு பெரிது என சொல்லலாம்…
நற்பணி இயக்கம் :
கடந்த 1997ம் ஆண்டு பூவே உனக்காக படத்திற்கு பின் தளபதி விஜய்க்கு என்று ரசிகர் மன்றம் தொடங்கப்பட்டது. அதன் பின்னர் 2004ம் ஆண்டு நற்பணி மன்றம் தொடங்கப்பட்டு அது 2009ம் ஆண்டு நற்பணி இயக்கமாக மாற்றப்பட்டது..
விஜய் மக்கள் இயக்கம் :
கடந்த 2009ம் ஆண்டு விஜய் மக்கள் இயக்கம் தொடங்கப்பட்டது.. தொடங்கப்பட்டது முதல் இலவச பாடசாலை., காலை உணவு என வழங்க தொடங்கினார்…
மீனவர்களுக்காக :
2011ம் ஆண்டு நாகை மாவட்டத்தில் மீனவர்களுக்காக நடத்தப்பட்ட கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றார்..
சுனாமி பாதிப்பு :
கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் சுனாமியால் பாதிகாப்பட்ட மக்களை சந்தித்து நிதியுதவி அளித்தார்..
ஈழப்போர் :
கடந்த 2013ம் ஆண்டு நடைபெற்ற ஈழப்போருக்கு எதிரான போராட்டத்தில் மக்களில் ஒருவராக அவர்களோடு பங்கேற்றார்..
ஜல்லிக்கட்டு :
கடந்த 2017ம் ஆண்டு ஜனவரி 17ம் தேதி ஜல்லிக்கட்டு நடத்த கூடாது என தடை விதிகப்பட்டது.. அப்போது சென்னை மெரினா கடற்கரையில் மக்களோடு மக்களாக கலந்து கொண்டு போராட்டத்தில் பங்கேற்றார்.. அதோடு மட்டுமின்றி ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
நீட் தற்கொலை :
கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி நீட் தேர்வால் அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டார்.. இந்த செய்தியை கேட்ட விஜய் அவரது வீட்டிற்கு சென்று அனிதாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்..
காவிரி நீர் பிரச்சனை :
கடந்த 2018ம் ஆண்டு ஏப்ரல் 8ம் தேதி காவிரி நதி நீர் பிரச்சனைக்காக நடிகர் சங்கம் நடத்திய போராட்டத்தில் முதல் ஆளாக பங்கேற்றார்..
தூத்துக்குடி துப்பாக்கி சூடு :
கடந்த 2018ம் ஆண்டு ஜூன் 7ம் தேதி நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் உயிர் இழந்தவர்களின் குடும்பத்திற்கு நேரில் சென்று ஆறுதல் அளித்து நிதியுதவி அளித்தார்..
பண மதிப்பிழப்பு நடவடிக்கை :
கடந்த நவம்பர் மாதம் 8ம் தேதி மத்திய அரசால் ஏற்பட்ட பண மதிப்பிழப்பிற்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொண்டு குரல் கொடுத்தார்..
மழை நிவாரணம் :
கடந்த 2023ம் ஆண்டு மழை நிவாரணத்தால் பாதிகப்பட்ட மக்களுக்கு நிதியுதவி மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கினார்..
மாணவர்களுக்கு விருது
2023ம் ஆண்டு ஜூன் மாதம் மாவட்டம் ரீதியாக 10 மற்றும் 12ம் வகுப்பில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு கல்வி விருது வழங்கினார்..
தமிழக வெற்றிக் கழகம் :
கடந்த பிப்ரவரி 2ம் தேதி 2024ம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என தன்னுடைய கட்சியின் பெயரை அறிவித்தார்..
கட்சியை அறிவித்த பின்னர் மார்ச் 11ம் தேதி குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான அறிக்கை,
ஜூன் 20ம் தேதி கள்ளக்குறிச்சி கள்ளசாராயம் விவகாராத்தில் பாதிகாப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல்… கூறினார்..
ஜூலை மாதம் கட்சி கொடி அறிமுகப்படுத்தபட்ட பின்னர் சின்னத்தில் யானை பொறிக்கப்பட்டதற்கு பிரச்சனை., மாநாடு நடத்த சிக்கல் என பல்வேறு பிரச்சனைகள் தாண்டி மாநாடு நடத்தப்பட்டது..
முதல் மாநில மாநாடு :
கட்சி தொடங்கிய பின் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் முதல் மாநில மாநாடு நடைபெற்றது.. அதில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்..
அரசியல் வருகை காரணம் :
இதற்கிடையில் கடந்த 2019ம் ஆண்டு வெளியான சர்கார் படத்தில் இருந்தே அவரது படங்களுக்கு கொடுக்கப்பட்ட சிக்கல் மற்றும் நெருக்கடியே அவர் அரசியல் வருகைக்கு காரணம் என அவரது ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..