கிளாம்பாக்கம் கோயம்பேடு ஆம்னி பேருந்து விவகாரம்..! ஹகோர்ட் உத்தரவு..!
கிளம்பாக்கம் மெட்ரோ இரயில் அமைக்கும் பணி முடியும் வரை அரசு மற்றும் தனியார் ஆம்னி பேருந்துகளை இயக்க முடியாது என உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
சென்னை மாநகர போக்குவரத்துகளின் நெருக்கடிகளை குறைக்க கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் 30ம் தேதி திறக்கப்பட்டது. பேருந்து நிலையம் அமைக்கும் போதே, பயணிகளுக்கு ஏதுவாக இருக்கும் வகையில் கிளாம்பாக்கம் விமான நிலையம், வேளச்சேரி – தாம்பரம் மெட்ரோ ரயில் இணைப்பு திட்டம் போன்றவற்றை செயல்படுத்த தீட்டப்பட்டது.
மெட்ரோ இரயில் பணிகள் துவங்கும் வரை, கோயம்பேட்டில் இருந்தே அரசு மற்றும் ஆம்னி பேருந்துகளை இயக்க உத்தரவிடக் கோரி திருச்செந்தூரை சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அந்த மனுவில், அவர் குறிப்பிட்டிருப்பதாவது விமான நிலையம், வேளச்சேரி – தாம்பரம் மெட்ரோ ரயில் சேவை, புதியதாக கட்டப்பட்டு வரும் கிளாம்பாக்கம் இரயில் நிலையம் அமைக்கும் பணிகள் முடியும் வரை அரசு மற்றும் தனியார் ஆம்னி பேருந்துகளை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கவும், இலகு மற்றும் கனரக வணிக வாகனங்களை சென்னை அவுட்டர் ரிங் ரோடு வழியாக இயக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது சபீக் அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி, இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது எனக் கூறி, வழக்கை வாபஸ் பெற்று, தனி நீதிபதி முன் வழக்கை நடத்தும்படி மனுதாரருக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், விசாரணையை நாளைக்கு தள்ளிவைத்தனர்.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..