புதினா பன்னீர் புலாவ் ரெசிபி..!
தேவையான பொருட்கள்:
பாசுமதி அரிசி – 2 கப்
பன்னீர் – 200 கிராம்
புதினா – 1 கட்டு
கிராம்பு – 4
பட்டை – 1 இன்ச்
வெங்காயம் – 2
பச்சை மிளகாய் – 3
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
தண்ணீர் – 4 கப்
செய்முறை :
வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
பன்னீரை சிறு சிறு துண்டுகளாக வெட்டுக் கொள்ள வேண்டும்.
புதினா மற்றும் பச்சை மிளகாயை நீரில் சுத்தம் செய்து மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.
அரிசியை நீரில் சுத்தமாக கழுவி முக்கால் பதத்திற்கு வேகவைத்து வடித்துக் கொள்ள வேண்டும்.
ஒரு ஃபேனை அடுப்பில் வைத்து அதில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து அதில் நறுக்கி வைத்துள்ள பன்னீரை சேர்த்து சிறிது நேரம் வறுத்து தனியே வைக்கவும்.
அதே ஃபேனில் சிறிது எண்ணெய் சேர்த்து அதில் பட்டை, கிராம்பு சேர்த்து தாளித்து அதில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்.
பின் அரைத்த புதினா மற்றும் உப்பு சேர்த்து வதக்க வேண்டும்.
அடுத்தது இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்க வேண்டும்.
பின் அதில் பன்னீர் துண்டுகள் மற்றும் வடித்த சாதத்தை சேர்த்து 5 நிமிடங்களுக்கு கலந்து விட்டு இறக்கினால் கமகமவென புதினா பன்னீர் புலாவ் தயார்.